பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவன பங்களிப்பில் 16 கண்காணிப்பு கேமராக்கள்

Added : அக் 24, 2021
Share
Advertisement
நெகமம்:வடசித்துாரில், 4 லட்சம் ரூபாய் செலவில், 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று துவங்கியது.வடசித்துார் - பனப்பட்டி ரோட்டில், சமீபத்தில் 'ஹெல்மெட்' அணிந்த பைக் ஆசாமிகளால், கணவருடன் பைக்கில் வந்த பெண்ணிடம், ஐந்து பவுன் செயின் வழிப்பறி செய்யப்பட்டது.நெகமம் போலீசாரின் நடவடிக்கையால், இரு நாட்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட பைக் ஆசாமிகள் கைது செய்யப்பட்டு,

நெகமம்:வடசித்துாரில், 4 லட்சம் ரூபாய் செலவில், 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று துவங்கியது.வடசித்துார் - பனப்பட்டி ரோட்டில், சமீபத்தில் 'ஹெல்மெட்' அணிந்த பைக் ஆசாமிகளால், கணவருடன் பைக்கில் வந்த பெண்ணிடம், ஐந்து பவுன் செயின் வழிப்பறி செய்யப்பட்டது.நெகமம் போலீசாரின் நடவடிக்கையால், இரு நாட்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட பைக் ஆசாமிகள் கைது செய்யப்பட்டு, செயின் பறிமுதல் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து, நெகமம் போலீசார், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், முக்கிய ரோடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்தனர்.இதன்படி, நான்கு லட்சம் ரூபாய் செலவில், 16 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று துவங்கியது. இதற்கான பூமி பூஜையில், ஊராட்சி தலைவர் கலைவாணி, துணைத்தலைவர் ஜப்பார், வி.ஏ.ஓ., ராமலிங்கம், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.வடசித்துாரை சுற்றியுள்ள நெகமம் ரோடு, கிணத்துக்கடவு, பனப்பட்டி, காட்டம்பட்டி மற்றும் மெட்டுவாவி ரோடுகள், ஊராட்சி அலுவலகம் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதனால், குற்றங்கள் குறையும், குற்றங்களில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் கண்டு கைது செய்ய முடியும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X