பொது செய்தி

தமிழ்நாடு

24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க...வாய்ப்பு!:வழக்கமான அளவு பெய்யும் என வானிலை அறிவிப்பு

Updated : அக் 25, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நாளை துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, இயல்பான அளவிற்கு பெய்யும் என்றும், இன்று முதல் நான்கு நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் உட்பட தென் மாநிலங்களுக்கு
24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க...வாய்ப்பு!:வழக்கமான அளவு பெய்யும் என வானிலை அறிவிப்பு

சென்னை:தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நாளை துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, இயல்பான அளவிற்கு பெய்யும் என்றும், இன்று முதல் நான்கு நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட தென் மாநிலங்களுக்கு முக்கியமானது வடகிழக்கு பருவமழை. இந்த பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் அல்லது ஜனவரி வரை பெய்யும். இந்த கால கட்டத்தில், அணைகள், ஏரிகள், குளங்கள், சிறு தடுப்பணைகள் உள்ளிட்ட, தமிழகத்தில் உள்ள நீராதாரங்கள் அனைத்திலும் நீர் மட்டம் உயரும்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயத்துக்கான ஆதாரங்களாகவும் விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட பல ஏரிகளிலும் நீர் மட்டம் உயரும். அதனால், கோடையில் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.


தாமதம்

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 20ல் துவங்கியிருக்க வேண்டும். ஆனால், ஒரு வாரம் தாமதமாக, நாளை துவங்க உள்ளது. அதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார். இந்த மழை இயல்பான அளவான, 44 செ.மீ., பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடகாவின் தென் மாவட்டங்கள், ஆந்திர கடலோர மாவட்டங்கள், ராயலசீமா பகுதிகள், புதுச்சேரி, கேரளாவின் கிழக்கு மாவட்டங்கள் போன்றவற்றிலும், வடகிழக்கு பருவமழையால் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் விபரம்:தமிழகத்தில் வட கடலோரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யும்.ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலுார், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும். சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், நாளை மிக கனமழையும்; திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். வரும், 27, 28ம் தேதிகளில், டெல்டா மாவட்டங்கள், கோவை, சேலம், மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முதல்வர் ஆலோசனை

தமிழக நீராதாரங்களில் நேற்றைய நிலவரப்படி, சராசரியாக 73 சதவீத நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை துவங்கி, மூன்று மாதங்கள் வரை கொட்டித் தீர்க்கும் என்பதால், நீர்நிலைகள் வேகமாக நிரம்ப வாய்ப்புள்ளது. எனவே, அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்தபடி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் நாளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விரிவான ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, ஏற்கனவே சென்னையில் மண்டலத்திற்கு ஒரு சிறப்பு அதிகாரி; பிற மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மாவட்ட கலெக்டர்களுடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.


-ஆண்டுதோறும் சட்ட போராட்டம்?

தமிழகம் மழைநீர் வடியும் கீழ்நிலை மாநிலமாக இருந்த போதும், உபரி நீரை கூட தேக்கி வைக்க போதுமான கட்டமைப்புகளை ஏற்படுத்தவில்லை. இதனால், ஆண்டுதோறும் சட்ட போராட்டம் நடத்தி, அண்டை மாநிலங்களிடம் தண்ணீரை கெஞ்சி கேட்கும் நிலை உள்ளது. பக்கிங்ஹாம் மற்றும் கூவம் ஆறுகள் வழியே கடலுக்கு அனுப்பி, மழை நீரை வீணாக்குவது தொடர் கதையாக உள்ளது.

இதற்கு தீர்வு காண, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை நீரை தேக்கி வைக்க, புதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.நீண்ட காலத்திற்கு பின், அ.தி.மு.க., ஆட்சியில், தேர்வாய் கண்டிகை என்ற புதிய ஏரி உருவாக்கப்பட்டது. இன்னும் ஏரிகளை உருவாக்க அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், மழைநீரை கடலில் விட்டு விட்டு, தண்ணீருக்காக சட்ட போராட்டம் நடத்துவது தவிர்க்க முடியாததாகி விடும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-அக்-202105:47:13 IST Report Abuse
Kasimani Baskaran என்னதான் மழை பெய்தாலும் கட்டாந்தரையில் அணை கட்ட முடியாது என்ற காரணத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களைத்தவிர நீரை பெரிய அளவில் சேமிக்க முடியாது. தமிழகத்தைப்பொருத்தமட்டில் கட்டாந்தரை என்றால் ஆட்டையைப்போட ஏதுவான நிலம் என்று அர்த்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X