அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வேண்டாம்: சசிகலா அதிரடி முடிவு?

Updated : அக் 25, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
அடுத்தடுத்து முயற்சி செய்தும், அ.தி.மு.க.,வில் தனக்கு சாதகமான சூழல் ஏற்படாததாலும், 'நாய், கொசு' என, தலைவர்களின் அர்ச்சனை தொடர்வதாலும் விரக்தி அடைந்துள்ள சசிகலா, அ.தி.மு.க., வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச் செயல ராக தேர்வான தன்னை நீக்கியது செல்லாது; அதேபோல, ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை
அ.தி.மு.க., வேண்டாம்: சசிகலா அதிரடி முடிவு?

அடுத்தடுத்து முயற்சி செய்தும், அ.தி.மு.க.,வில் தனக்கு சாதகமான சூழல் ஏற்படாததாலும், 'நாய், கொசு' என, தலைவர்களின் அர்ச்சனை தொடர்வதாலும் விரக்தி அடைந்துள்ள சசிகலா, அ.தி.மு.க., வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச் செயல ராக தேர்வான தன்னை நீக்கியது செல்லாது; அதேபோல, ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது' என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.


அபராதம்

அதற்கு பதிலடியாக, 'சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளும், சென்னை உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இவ்வழக்கு, சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, 'அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக உரிமை கோருவதற்கு சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை.'சசிகலா தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல. அதை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்' என, பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.


latest tamil news


பின், வழக்கின் விசாரணை 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.இதற்கிடையில், அ.தி.மு.க., தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது; வீடியோ, ஆடியோ வாயிலாக அழைப்பு விடுப்பது; காரில் அ.தி.மு.க., கொடி பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் சசிகலா ஈடுபட்டார்.அ.தி.மு.க., பொன் விழா ஆண்டையொட்டி, எம்.ஜி.ஆர்., இல்லத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 'பொதுச் செயலர் சசிகலா' என்ற பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.

இப்படி, பல கட்ட முயற்சிகளை சசிகலா மேற்கொண்டாலும், அ.தி.மு.க.,வில் அவரை ஏற்பதற்கான சூழல் உருவாகவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து திரும்பிய அவரை ஏற்றுக் கொள்ள, தொண்டர்களும் முன்வரவில்லை. 'சசிகலா கொசு' என, ஜெயகுமாரும்; 'சூரியனைப் பார்த்து குரைக்கிறது' என, சசிகலாவை நாய் என்ற பொருள்படும்படி பழனிசாமியும் விமர்சித்தனர். இந்த அர்ச்சனையாலும், தான் நம்பிய பன்னீர்செல்வம் கூட, தனக்காக வாய் திறக்கவில்லை என்பதாலும், சசிகலா விரக்தி அடைந்துள்ளார்.


அந்தஸ்து

இதனால், குழப்பத்தில் இருந்த சசிகலாவிடம், 'அ.தி.மு.க.,வை விட்டு விட்டு, அ.ம.மு.க.,வை முழுதாக ஏற்று நடத்த வேண்டும்' என, தினகரன் மூளைச் சலவை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து அ.ம.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக சசிகலா அமைதியாக இருந்ததால், அ.ம.மு.க.,வுக்கு 2.5 சதவீத ஓட்டுகளே கிடைத்தன. அ.தி.மு.க.,வுக்கு 33 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. சசிகலா மட்டும் அ.ம.மு.க.,வுக்கு ஆதரவு அளித்திருந்தால், 10 சதவீத ஓட்டுகள் கிடைத்து, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கலாம் என, தினகரன் கருதுகிறார்.அத்துடன், பன்னீர்செல்வத்தை நம்பி, இனி அ.தி.மு.க.,வை மீட்கும் திட்டத்தில் ஈடுபட வேண்டாம்; அ.ம.மு.க.,வை முழுமையாக ஏற்று நடத்த வாருங்கள்.

எம்.ஜி.ஆர்., காலத்து அரசியல்வாதிகளுக்கு, அ.ம.மு.க.,வில் முக்கியத்துவம் கொடுத்து, அ.தி.மு.க., தொண்டர்களை இழுக்கலாம் என சசிகலாவை, தினகரன் மூளைச் சலவை செய்துள்ளார். இதை சசிகலாவும் ஏற்றுள்ளதாக தெரிகிறது.வரும் 27ம் தேதி, தஞ்சாவூரில் நடக்கிற தினகரனின் மகள் திருமண வரவேற்பு விழாவில் சசிகலா பங்கேற்கிறார்.
அதன்பின் 28, 29ம் தேதிகளில், மதுரை சங்கம் ஓட்டலில் தங்கியிருந்து, கோவில்களில் சுவாமி தரிசனம் செய்கிறார்.வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் பங்கேற்கிறார். அவருடன் தினகரனும் பங்கேற்கிறார். இனிவரும் நாட்களில் இருவரும் இணைந்தே பணியாற்றுவர். அ.தி.மு.க.,வே வேண்டாம் என்ற நிலைக்கு சசிகலா செல்வார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
31-அக்-202111:52:45 IST Report Abuse
M  Ramachandran போய் உங்கள் சமுதாய ஆட்காலில் கை காலில் விழுந்து ஜாதி பேரை சொல்லி கட்சியாய் நடத்துங்கள் அது தான் இரண்டு மூன்று மாவட்டங்களில் உங்கள் செல்வாக்கைய தெரிவிக்கும். தினகரன் ஒரு குற்ற வாளி உங்கள் பங்க்குக்கு நீங்களும் ஜையில் வாசம் அனுபவிச்சாச்சு. மத்திய அரசின் கருணை நீடிப்பதால் இன்னும் தினகரன் கம்பெனி தீயகர் வாசத்திற்கு செல்ல வில்லையை. அதுவும் கூடிய சீக்கிரத்தில் எடுபடும் மும்பு ஷிவ்ஜி கனேசன் உங்கள் சமூகம் தான் ஆனால் அவராய் நிராகரித்தார்கள். நீங்கள் முயலுங்கள் பார்ப்போம்.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
30-அக்-202113:18:31 IST Report Abuse
Milirvan மன்னார்குடி கும்பலின் அராஜகமும் கொள்ளையும் இன்னமும் மக்களின் மனதிலிருந்து மறையவில்லை. எம்ஜிஆரின் அதிமுக ஓரிருமுறை தோற்றத்திற்கும் இவர்கள் மேல் மக்கள் கொண்ட பெரும் வெறுப்பே காரணமாயிருந்தது.. நிற்க, எல்லா கட்சித்தலைகளுக்கும் வயதாகிக்கொண்டிருக்கிறது.. என்னவோ ஆணி அடித்துக்கொண்டு நிரந்தரமாக தங்க போவது போல பிறக்கட்சிகளை பிளக்க யத்தனிக்கிறார்கள்..
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
28-அக்-202114:50:34 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman என்னடா தேர்தல்ல தோத்தாலும் அதிமுக உறுதியா நிக்குதேன்னு பார்த்தேன். அதை உசுப்பி பார்க்க திமுக விற்கு இப்போது இருக்கும் ஒரே ஆயுதம் இந்த அம்மா தான். இவங்களும் முடியாதுன்னுட்டா அப்புறம் எப்படி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X