பொது செய்தி

இந்தியா

சர்ச்சைக்குரிய விளம்பரம்; சிக்கலில் 'டாபர்' நிறுவனம்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி-கணவன் - மனைவி இணைந்து கொண்டாடும், 'கர்வா சவுத்' பண்டிகையை ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாடுவது போல சித்தரிக்கப்பட்ட, 'டாபர் பெம்' விளம்பரம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தின் நான்காவது நாளை, 'கர்வா சவுத்' பண்டிகை என்ற பெயரில் வட மாநில பெண்கள் கொண்டாடுகின்றனர். கணவனின் நலன் மற்றும் திருமண பந்தம் உறுதியாக இருக்க

புதுடில்லி-கணவன் - மனைவி இணைந்து கொண்டாடும், 'கர்வா சவுத்' பண்டிகையை ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாடுவது போல சித்தரிக்கப்பட்ட, 'டாபர் பெம்' விளம்பரம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.latest tamil newsகார்த்திகை மாத பவுர்ணமி தினத்தின் நான்காவது நாளை, 'கர்வா சவுத்' பண்டிகை என்ற பெயரில் வட மாநில பெண்கள் கொண்டாடுகின்றனர். கணவனின் நலன் மற்றும் திருமண பந்தம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, கணவனை அமர வைத்து மரியாதை செலுத்தி வணங்குவது வழக்கம். இந்த பண்டியை நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி, 'டாபர்' நிறுவனத்தின், 'பெம் கிரீம்' என்ற முகப் பொலிவு கிரீமின் விளம்பரம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில், ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்கு முகப் பொலிவு கிரீமை தடவியபடி கர்வா சவுத் பண்டிகையின் பெருமை குறித்து விளக்குவார். அதன் பின் இரு பெண்களும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்தபடி கர்வா சவுத்தை கொண்டாடுவர். ஒரே பாலினத்தை சேர்ந்த இருவரும் தம்பதியராக வாழ்வதை இந்த விளம்பரம் சித்தரிக்கிறது.


latest tamil newsஇதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மிகவும் முற்போக்கான சிந்தனை உடைய விளம்பரம் என்று ஒரு தரப்பினரும், இது ஹிந்துக்களின் பண்டிகையை இழிவுபடுத்தும் விதமாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக மற்றொரு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு இது போன்ற விளம்பரங்களை ஏன் எடுப்பதில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையின் சிறப்பை உருது மொழியில் விவரிக்கும், 'பேப் இந்தியா' மற்றும் சாலையில் பட்டாசு வெடிக்காதீர்கள் என்ற கருத்தை கூறும், 'சீயட்' டயர் விளம்பரமும் சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளாயின.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
26-அக்-202120:47:06 IST Report Abuse
spr நேர்மையான விளம்பரங்களை விட எதிர்மறையான கருத்துக்களை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள் மக்களிடம் ஒரு தாக்கத்தை உண்தாக்கும் என்பது விளம்பரக் கலையின் ஆரம்பப் பாடம் பன்னாட்டு நிறுவனங்கள் இதனை கடைபிடிக்கும் இதற்கு நம் நாட்டிலேயே சிலர் ஆதரவும் தருவதால் ஊடகங்களும் செய்தித்தாள்களும் இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆதரவும் இருக்கும் எதிர்ப்பும் இருக்கும் அதன் விழுக்காட்டைப் பொறுத்து வியாபாரம் களைகட்டும் இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட்டால் இவை தானே குறையும்
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
25-அக்-202115:11:53 IST Report Abuse
Samathuvan எப்போதும் அமெரிக்கா பற்றியே பேசும் அறிவிலிகள் இதையும் சேர்த்துக்க வேண்டியது தானே. எதுக்கு இவ்வளவு சீரியசா எடுத்துக்கணும்.
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
27-அக்-202100:42:33 IST Report Abuse
Venkateshஉன் வாயையும் மூடு....
Rate this:
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
25-அக்-202112:27:06 IST Report Abuse
Bala Murugan ஓரின காதல், கல்யாணம் , காமம் , முத்தம் எல்லாவற்றையும் படமாகவும், குறும்படமாகவும் எல்லா மொழிகளிலும் எடுத்து காட்டுகிறீர்கள். ஆணும் ஆணும் சேர்க்கையைவிட பெண்ணும் பெண்ணும் ஓரினச்சேர்க்கை என்று பல குறும்படங்கள் மற்றும் படங்கள் வந்துவிட்டது. வருகிறது. அப்படி இருக்க முகப்பொலிவு கிரீம் ஆணுக்கு மனைவியாக வருபவள் மட்டும் தான் போடணுமா? பொதுவாக பெண்களுக்குரிய முகப்பொலிவு கிரீம். ஒரு பெண் உபயோகிப்பதை மற்றொரு பெண் ரசிக்கிறாள். இப்படி நுன்னிப்பாக பார்த்தால் யாரும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் நட்பு பாராட்ட முடியாது. இந்தக் காலம் கலி காலத்திலும் மோசமாகிவிட்டது. தாத்தா வயது உள்ளவர் பேத்தி வயது பெண்ணிடம் சில்மிஷம் பண்ணி போலிசோ சட்டத்தில் கைது ஆகிறார். பெண்களுக்கு - அதுவும் பிறந்த குழந்தையில் இருந்து மூதாட்டியாக இருக்கும் பெண்கள் வரை பாலியல் தொல்லை அதிகரித்து விட்டது. எனவே இது போன்ற விளம்பரங்கள் தேவை இல்லாதது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X