காங்.,குக்கு 'டிபாசிட்' கிடைக்காது: லாலு பிரசாத் யாதவ் சாபம்

Updated : அக் 26, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (5)
Advertisement
புதுடில்லி:''பீஹார் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி அளித்தால் அவர்களால், 'டிபாசிட்' கூட வாங்க முடியாது,'' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.பீஹாரில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்., மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி.,
 காங்.,குக்கு 'டிபாசிட்' கிடைக்காது: லாலு பிரசாத் யாதவ் சாபம்

புதுடில்லி:''பீஹார் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி அளித்தால் அவர்களால், 'டிபாசிட்' கூட வாங்க முடியாது,'' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.



பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.பீஹாரில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்., மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இந்நிலையில், வரும் 30ல் இடைத் தேர்தல் நடக்க உள்ள தாராபூர், குஷேஷ்வர் சட்டசபை தொகுதிகளுக்கு காங்., உடன் ஆலோசிக்காமல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த காங்., போட்டி வேட்பாளர்களை அறிவித்தது.

இது மகா கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.'ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு பா.ஜ.,வுடன் ரகசிய கூட்டணி உள்ளது' என, பீஹார் காங்., பொறுப்பாளர் பக்த் சரன் தாஸ் சமீபத்தில் அறிவித்தார். இது குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அவர் கூறியதாவது:காங்கிரசுடன் கூட்டணியில் இருப்பதால் எந்த பயனும் இல்லை. பீஹார் சட்டசபை இடைத்தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரசுக்கு ஒரு இடம் அளித்தால் அவர்கள், 'டிபாசிட்' கூட வாங்க மாட்டார்கள்.எனக்கு உடல் நலம் சரியில்லை. டாக்டர்கள் அனுமதித்தால் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
25-அக்-202117:20:22 IST Report Abuse
sankaseshan ஹரிச்சந்திரன் சொக்க தங்கம் கரைபடியாத கரம் உடைய மாட்டு தீவன ஊழல் சொன்னது சரியாதான் இருக்கும்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-அக்-202115:47:09 IST Report Abuse
S.Baliah Seer லாலு பழுத்த அரசியல்வாதி. அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. காங்கிரஸ் அடுத்தவர்கள் மூலம் நோகாமல் நுங்கு தின்ன பார்க்கிறது.
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
25-அக்-202110:50:20 IST Report Abuse
RandharGuy மண் விழுந்துவிட்டது மக்கள் வாழ்க்கையில் கங்கையில் கறைபிரன்டு ஓடிய கோவிட் .....பெட்ரோல் டீசல் கியாஸ் என கொள்ளை ....அரசு நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் அவலம் ....அவலங்களின் தொடர்கதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X