பொது செய்தி

தமிழ்நாடு

நவோதயா பள்ளிகள் துவக்க வேண்டும்: தமிழக அரசுக்கு பாலகுருசாமி கோரிக்கை

Updated : அக் 26, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை:'தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவக்க, தமிழக அரசு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர் விடுத்து உள்ள வேண்டுகோள் அறிக்கை: நாடு முழுதும் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில், 638 நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், உறைவிட
 நவோதயா பள்ளிகள் துவக்க வேண்டும்: தமிழக அரசுக்கு பாலகுருசாமி கோரிக்கை

சென்னை:'தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவக்க, தமிழக அரசு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர் விடுத்து உள்ள வேண்டுகோள் அறிக்கை: நாடு முழுதும் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில், 638 நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், உறைவிட பள்ளிகளாக செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் 75 சதவீதம், ஊரக பகுதி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.ஐ.ஐ.டி., சேர்க்கைக்கான ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெறுவோரில் 20 சதவீதம் பேர், நவோதயா பள்ளி மாணவர்கள்.

அதேபோல, 'நீட்' தேர்வில் 80 சதவீதம், நவோதயா பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் திறக்க அனுமதி வழங்காமல், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிகள் தடுத்து வருகின்றன.

கடந்த 2017ல் கன்னியாகுமரியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல வழக்கு தொடர்ந்தது. அதில், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு நவோதயா பள்ளி திறக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதைய, அ.தி.மு.க., அரசு இந்த பணியை துவங்கவில்லை.

நவோதயா பள்ளி விதிகளின்படி, அந்த பள்ளிகள் அமைந்துள்ள மாநில மொழிகளே, முதல் மற்றும் பயிற்று மொழியாக கடைப்பிடிக்கப்படும். இதை பார்க்கும் போது, தமிழக மொழி கொள்கைக்கு மாற்றம் இல்லாமல், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட முடியும். எனவே, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பும் தமிழக அரசு, நவோதயா பள்ளிகளை திறக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியல் கட்சிகள் அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.இவ்வாறு பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
25-அக்-202117:52:53 IST Report Abuse
sankaseshan முன்னாள் அண்ணா பல்கலை துணை வேந்தர் சரியாத்தான் சொல்லறார் ஆனா டிராவிடனுங்க செய்ய மட்டனுங்களே அவனுக நடத்துற CBSC செலபஸ் பள்ளில் வருமானம் போய்விடுமே அதுவும் கிராமப்புற மாணவர்களுக்கு எல்லாமே இலவசம் விடுவார்களா படித்து முன்னேறிவிட்டால் இவங்க பித்தலாட்டம் தெரிந்து விடுமே இதை எதிர்ப்பதற்கு சபரீசன் பாமரன் போன்றோரை கொம்பு சீவிவிட்டு தயார் பண்ணியிருக்காங்க அவனுங்களும் தவறாமல் பெட்ரோல் டீசல் என்று ஊளைவிடுவாங்க
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
25-அக்-202116:25:22 IST Report Abuse
Bala திரு பாலகுருசாமியின் இந்த கருத்துக்கு மதிப்பளித்து பிஜேபி தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் ஆரம்பிக்க வேண்டி ஒரு போராட்டம் நடத்தினால் மக்கள் ஆதரவு நிச்சயமாக கிடைக்கும். இதை சாத்தியப்படுத்த முடியும்
Rate this:
Cancel
25-அக்-202114:19:13 IST Report Abuse
சம்பத் குமார் 1). பிரச்சினையே திராவிட கட்சிகள்.அதிலும் குறிப்பாக AIADMK.2). திமுக நாங்கள் இப்படிதான் என்று சொல்கிறது அல்லது நடக்கிறது. 3). ஆனால் AIADMK மக்களிடம் ஏமாற்றுபவர்கள். மக்கள் இவர்களால் குழப்பம் அடைடுகிறார்கள். பஜேபி AIADMK விலிருந்து வெளி வர வேண்டும். 4). தேச பற்று உள்ள ஒரு கட்சியை நாம் ஆதரித்தால் மட்டுமே இந்த பிரச்சினையில் இருந்து விரைவில் மீண்டு வர முடியும். நன்றி ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X