அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தடையின்றி உரம் கிடைக்க அரசின் நடவடிக்கை தேவை'

Updated : அக் 26, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: 'விவசாயிகளுக்கு யூரியா மற்றும் இதர உரங்கள் நியாயமான விலையில் தடையின்றி கிடைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில் சம்பா சாகுபடி நடந்தும் வரும் டெல்டா மாவட்டங்களில், உரங்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. பயிர்கள் பசுமை பெறவும், வளர்ச்சி அடையவும்
'தடையின்றி உரம் கிடைக்க அரசின் நடவடிக்கை தேவை'

சென்னை: 'விவசாயிகளுக்கு யூரியா மற்றும் இதர உரங்கள் நியாயமான விலையில் தடையின்றி கிடைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில் சம்பா சாகுபடி நடந்தும் வரும் டெல்டா மாவட்டங்களில், உரங்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. பயிர்கள் பசுமை பெறவும், வளர்ச்சி அடையவும் நைட்ரஜன் தேவை என்பதால், யூரியாவின் தேவை மிகவும் அதிகரித்து, தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக உரங்களை பெற்று, விவசாயிகளுக்கு அளிக்கும் நடவடிக்கை ஒரு புறம் இருந்தாலும், விவசாயிகளுக்கு அதிகமாக தேவைப்படும் யூரியா, தங்கு தடையின்றி நியாயமான விலையில், நிபந்தனையின்றி கிடைக்க வேண்டும். மேலும், பிற உரங்களையும் போதுமான அளவு இருப்பு வைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது தான் டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு.எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி, விவசாய உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வளம் பெறவும் ஏதுவாக, நிபந்தனைகள் இன்றி, விவசாயிகளுக்கு யூரியா மற்றும் இதர உரங்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-202121:27:24 IST Report Abuse
அப்புசாமி ஒன்றிய அரசிடம் கேட்டு குறைந்த விலைக்கு அதிமுக வே விக்கலாமே...
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
25-அக்-202111:25:53 IST Report Abuse
sankar தன் இருப்பை தினமும் காட்டிக்கொள்கிறார்,
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-அக்-202106:11:22 IST Report Abuse
Kasimani Baskaran அடுத்ததாக சிமிண்ட் தட்டுப்பாடு போல உரத்தட்டுப்பாட்டை உருவாக்கி வியாபாரிகளின் கூட்டு முயற்சியில் பல்லாயிரம் கோடி கமிசன் பார்த்து விடுவார்கள். தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் சிமிண்ட் தட்டுப்பாடோ அல்லது விலை உயர்வோ இல்லையே என்று ஒரு மானமுள்ள திராவிடனும் கேட்கவே மாட்டான். திராவிட அடைமை டிசைன் அப்படி...
Rate this:
raja - Cotonou,பெனின்
25-அக்-202115:38:53 IST Report Abuse
rajaஒரு குடும்பம் முன்னேற உழைக்கும் கொத்தடிமைகளுக்கு அந்த கேட்கும் உரிமை ஏது ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X