சிறுநீர் கழிக்க எதிர்ப்பு: துப்பாக்கியால் சுட்ட போலீஸ்

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
டேராடூன்-உத்தரகண்டில் பொது வெளியில் சிறுநீர் கழிக்க எதிர்ப்பு தெரிவித்த நபரை, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு டேராடூனின் ராஜ்புட் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு, நிதின் குமார் லோஹன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் வந்தார்.அந்த கடையை புனீத் கரோலா என்பவர் தன் நண்பருடன்

டேராடூன்-உத்தரகண்டில் பொது வெளியில் சிறுநீர் கழிக்க எதிர்ப்பு தெரிவித்த நபரை, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.



latest tamil news


உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு டேராடூனின் ராஜ்புட் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு, நிதின் குமார் லோஹன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் வந்தார்.அந்த கடையை புனீத் கரோலா என்பவர் தன் நண்பருடன் நடத்தி வந்தார்.

கான்ஸ்டபிள் நிதின் குமார், அந்த கடையில் தனக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, அருகில் உள்ள திறந்த வெளியில் சிறுநீர் கழித்தார். இதைப் பார்த்த புனீத், அங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது எனக் கூறி அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


latest tamil news


ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நிதின், தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியால் புனீத்தை சுட்டார். வயிற்றில் குண்டு பாய்ந்து காயமடைந்த புனீத், அங்கேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து நிதின் அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றார்.புனீத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
25-அக்-202117:35:47 IST Report Abuse
Vena Suna மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
25-அக்-202111:38:53 IST Report Abuse
Kalyan Singapore மோடியின் திறந்த வெளி சிறுநீர் கழிக்க தடை என்பதெல்லாம் பி. ஜே பி. ஆளும் மாநிலங்களுக்கு பொருந்தாதா ? போலீஸ் காரரே செய்தால் சாதாரண மக்கள் என் செய்வர் ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-அக்-202108:55:07 IST Report Abuse
duruvasar சமூகநீதி சம்பந்தப்பட்டது. சிறுநீர் கழிக்கக் கூடாது என கூறியவர் ஆதிக்க சாதியை சேர்ந்தவர். மேலும் இப்படி போகக்கூடாது என்று சொல்வது மனித உரிமை மீறும் செயல். பிஜேபி ஆளும் மாநிலங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்கதையாக உள்ளது. இப்படி தமிழ் காட்சி ஊடகங்களில் செய்தி வாசிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X