பொது செய்தி

இந்தியா

பாலியல் வழக்கிற்கு விரைவு நீதிமன்றம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி-பாலியல் வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கும்படி, 10 மாநிலங்களை மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.மத்திய அரசு, 2019 அக்., 2ல் சிறார் பாலியல் கொடுமை உள்ளிட்ட பாலியல் வழக்குகளை விசாரிக்க, 1,028 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து தமிழகம், உ.பி., ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட 17 மாநிலங்கள் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட

புதுடில்லி-பாலியல் வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கும்படி, 10 மாநிலங்களை மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.



latest tamil news


மத்திய அரசு, 2019 அக்., 2ல் சிறார் பாலியல் கொடுமை உள்ளிட்ட பாலியல் வழக்குகளை விசாரிக்க, 1,028 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து தமிழகம், உ.பி., ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட 17 மாநிலங்கள் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் விரைவு நீதிமன்றங்களை அமைத்துவிட்டன.

ஆனால் மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் ஒரு நீதிமன்றத்தைக் கூட அமைக்கவில்லை. மேற்கு வங்கத்திற்கு 123 விரைவு நீதிமன்றங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவாவிற்கு ஒதுக்கிய இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.'பாலியல் வழக்குகள் குறைவு என்பதால், அவற்றை விசாரிக்க தற்போதுள்ள நீதிமன்றங்களே போதும்' என, அருணாச்சல பிரதேசம் தெரிவித்துள்ளது.


latest tamil news


பீஹாருக்கு ஒதுக்கிய 54 விரைவு நீதிமன்றங்களில், இதுவரை 45 தான் அமைக்கப்பட்டுஉள்ளன. அதுபோல, மஹாராஷ்டிராவுக்கு ஒதுக்கிய 138 விரைவு நீதிமன்றங்களில், 33 தான் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், விரைவு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்கும்படி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-202110:30:49 IST Report Abuse
அப்புசாமி போக்சோ புண்ணாக்கு சட்டத்தைப் போட்டு நீங்களே எடுத்து விசாரிக்க வேண்டியதுதானே? பொள்ளாச்சி ஆளுங்க ஜெயில்ல சுக போகமா இருக்காங்களாம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-அக்-202108:48:31 IST Report Abuse
duruvasar எதுக்குங்க கோர்ட். லஞ்சம் வாங்கினாலேயே திருப்பி கொடுத்து சமரசம் ஆயிட்டோம்னு சொன்னா கோர்ட் ஏத்துக்குது. விவேக் படத்தில் கற்பழித்த மைனர் குஞ்சு இந்த வழியைக் தான் பயன்படுத்துவார். நீதிமன்றங்களே சமரசத்திற்க்கு ஊக்கம் தருகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X