பொது செய்தி

இந்தியா

புது வகை உருமாறிய கொரோனா; இந்தூரில் ஏழு பேருக்கு பாதிப்பு

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி-நம் நாட்டில் இரண்டாவது அலை பரவலுக்கு காரணமாக, 'டெல்டா' வகையின் ஒரு பகுதியான, 'ஏ.ஒய்., - 4' என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது.மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு, இந்த புதிய தொற்று உறுதியாகி உள்ளது.நம் நாட்டில் கடந்தாண்டு அக்டோபரில் முதலில் தென்படத் துவங்கியது, 'பி.1.617.2' எனப்படும் டெல்டா வகை

புதுடில்லி-நம் நாட்டில் இரண்டாவது அலை பரவலுக்கு காரணமாக, 'டெல்டா' வகையின் ஒரு பகுதியான, 'ஏ.ஒய்., - 4' என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது.



latest tamil news


மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு, இந்த புதிய தொற்று உறுதியாகி உள்ளது.நம் நாட்டில் கடந்தாண்டு அக்டோபரில் முதலில் தென்படத் துவங்கியது, 'பி.1.617.2' எனப்படும் டெல்டா வகை உருமாறிய கொரோனா. இரண்டாவது அலை பரவலுக்கு இதுவே முக்கிய காரணம். இந்நிலையில் இந்த டெல்டா வகை வைரஸ் அடிப்படையில், 55 புதிய உருமாறிய வைரஸ்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அதில் ஒன்றான, ஏ.ஒய்., - 4 என்ற வைரஸ் தற்போது தென்பட்டுள்ளதாக, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.புதிய தொற்றுகடந்த செப்., மாதம் தொற்று ஏற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, மத்திய பிரதேசத்தின் இந்துாரில் ஏழு பேருக்கு இந்த புதிய வகை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.பல்வேறு இடங்களில் பணியாற்றி, மாவ் ராணுவ முகாமுக்கு வந்தவர்களில் 30 பேருக்கு தொற்று உறுதி யானது. அதில் இரண்டு அதிகாரிகளுக்கு, இந்த புதிய தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இவர்கள் அனைவரும் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுள்ளனர்.

மேலும், எந்த நோய் அறிகுறிகளும் அவர்களிடம் தென்படவில்லை.மஹாராஷ்டிராவில் நடத்தப்பட்ட சோதனைகளில், அங்கும் இந்த புதிய வகை உருமாறிய வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது.இந்த புதிய வகை உருமாறிய வைரஸ் எவ்வளவு வேகமாக பரவக்கூடியது என்பது உள்ளிட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே 'ஏ.ஒய்., - 4.2' எனப்படும் 'டெல்டா பிளஸ்' பாதிப்பு, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் அதிக அளவில் உள்ளது. ''நம் நாட்டில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு, மக்கள் தொகையில் 0.1 சதவீதம் பேருக்கே ஏற்பட்டுள்ளது. அதனால் பயப்படத் தேவையில்லை,'' என, சி.எஸ்.ஐ.ஆர்., உயிரணு ஆய்வு மைய இயக்குனர், டாக்டர் அனுராக் அகர்வால் கூறியுள்ளார்.உ.பி.,யில் ஸிகாஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்திய விமானப்படையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு 'ஸிகா வைரஸ்' பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாநிலம் முழுதும் சுகாதாரத் துறையினர் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.ஆன்லைனில் வாங்கலாம்!பண்டிகை காலம் நெருங்கியுள்ளதால், அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள கடிததத்தில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், மக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, 'ஆன்லைன்' வாயிலாக பொருட்களை வாங்க ஊக்குவிப்பது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news



இரண்டாவது 'டோஸ்' முக்கியம்

மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 76 சதவீதம் பேருக்கு, அதாவது 71.24 கோடி பேருக்கு, முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 32 சதவீதம் பேருக்கு, அதாவது 30.06 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி, இரண்டாவது டோஸ் செலுத்துவதற்காக காத்திருப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும். இதற்காக மாவட்ட அளவில் பட்டியல் தயாரித்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
25-அக்-202113:19:57 IST Report Abuse
Chakkaravarthi Sk இந்த நல்ல செய்தியை கேட்ட பின்னர் தான் தமிழகத்தில் பெரும்பாலான அறிவு ஜீவிகள் கருத்து சுதந்திர போராளிகள் ஊடக அறத்தின் பிள்ளைகள் போன்றோர் இன்று மதியன்னம் நல்ல சிக்கன் பிரியாணியும் மீன் வறுவலும் சாப்பிட்டு தூங்கி எழுந்து தமிழக ஊடகங்களில் இன்று சாயங்காலம் விவாத மேடையை கலக்க போகின்றார்கள். தமிழகமே தயாரா இரு, இன்று சாயங்காலம் ஊடக அறிவுஜீவிகள் ஊடக நெறியாளர்கள் பர்பார்மன்ஸை பார்த்து மகிழலாம்
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
25-அக்-202113:01:20 IST Report Abuse
elakkumanan அப்போ , இனி அடுத்த ரெண்டு மூணு மாசத்துக்கு மோடி ஒழிக போடும் கோஷ்டிக்கு புதுசா காரணம் தேடி அலையும் வேலை இல்லை போல ...............மூணாவது அலைக்கு காரணமான மோடி ஒழிக ன்னு சொல்லிட்டு போயிகிட்டயே இருக்கலாம்....
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
25-அக்-202112:36:47 IST Report Abuse
elakkumanan கைதட்டுறது , விளக்கேற்றுவது எல்லாம் கஷ்டமா இருக்கா நண்பா......இன்னோர் நண்பர் இப்போவே விறகு கட்டை எல்லாம் ரெடி பண்ணிவச்சிருக்கார்....கஷ்டம்தான்.............ஏதாவது ஏரோபிளான் டயரை பிடிச்சு தப்பிச்சு போயி சொர்க்க வாழ்க்கை வாழலாம் ல நண்பா.................முயற்சி பண்ணுங்களேன்...............சொர்க்கம் கூப்பிடு தூரத்துல நண்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X