பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் தொடரும் வேட்டை; பாகிஸ்தான் பயங்கரவாதி பலி

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஜம்மு-ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், பாக்., கைதி சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், சுரன்கோட்டிற்கும், ரஜோரி மாவட்டம் தனமண்டிக்கும் இடையே, வனப் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ஜம்மு - ரஜோரி

ஜம்மு-ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், பாக்., கைதி சுட்டுக் கொல்லப்பட்டார்.



latest tamil news


ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், சுரன்கோட்டிற்கும், ரஜோரி மாவட்டம் தனமண்டிக்கும் இடையே, வனப் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ஜம்மு - ரஜோரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, காட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கர வாதிகளை அடையாளம் கண்டு வேட்டையாடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


லஷ்கர் - இ - தொய்பா

நேற்று பட்டா துரியன் காட்டிற்குள் முன்னேறிய பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூவர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் சுட்டதில், பாக்., கைதி ஜியா முஸ்தபா பலியானார்.

இது குறித்து, போலீஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஜியா முஸ்தபா என்ற லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, மென்தர் வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவிய போது, 2003ல் கைது செய்யப்பட்டார்.

காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முஸ்தபா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். கோட் பல்வால் சிறையில் இருந்த ஜியா முஸ்தபாவுக்கும், மென்தரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஜியா முஸ்தபா, மென்தர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். பாதுகாப்பு படையினர் ஜியா முஸ்தபா உதவி யுடன் நேற்று, காட்டுக்குள் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்கச் சென்றனர்.


latest tamil news


அப்போது பயங்கர வாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜியா முஸ்தபா மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூவர் படுகாயம் அடைந்தனர். பாதுகாப்பு அரண்உடனே மூவரும் பழைய இடத்திற்கு திரும்பி விட்டனர். இதைத் தொடர்ந்து, கூடுதல் படை காட்டுக்குள் விரைந்தது. அங்கு ஜியா முஸ்தபா இறந்து கிடந்தார். அவரது உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். மென்தர் காட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு படையினர் அரண் அமைத்து உள்ளனர்.இதையடுத்து, பயங்கரவாதிகள் காட்டுக்குள் உள்ள இயற்கை குகைகளுக்கு சென்று பதுங்கி உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிபடுவர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஆப்பிள் வியாபாரி பலி

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், சோபியன் மாவட்டம் ஜைன்போரா கிராமத்தைச் சேர்ந்த ஷாஹித் அஜாஸ் என்ற ஆப்பிள் வியாபாரி, குண்டு பாய்ந்து பலியானார். பாதுகாப்பு படையினர் முகாமில் ஆயுதங்களை கைப்பற்ற, பயங்கரவாதிகள் முயற்சித்த போது நடந்த தாக்குதலில், ஷாஹித் அஜாஸ் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-202114:47:46 IST Report Abuse
சம்பத் குமார் 1). காஷ்மீர் நமது முழு கட்டுப்பாட்டில் உள்ளது.2). தீவிர விசாரணை மற்றும் தேடுதல் நடத்தினால் நமது காஷ்மீர் சகோதரர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.3). நினைவு இருக்கட்டும், ஔரங்கசீப் காலத்தில் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளை எதிர்த்து சிவாஜி அவருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.4). ஔரங்கசீப் தன் சுய சரிதையில் சிவாஜி தன்னுடைய ஒவ்வொரு நாள் தூக்கத்தை கெடுத்தவர் என்று குறிப்பிட்டத்தை கூறியதை மறுத்து விட கூடாது. நன்றி ஐயா
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-அக்-202110:53:48 IST Report Abuse
raja ஒருத்தன் மிஞ்சக்கூடாது... நான் மூர்க்கன்னு சொல்ல.....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-அக்-202109:54:04 IST Report Abuse
Lion Drsekar என்னதான் பூச்சி மருந்து தெளித்தாலும், ஒட்டடை அடித்தாலும் தினம் தினம் வீட்டினுள் ஒட்டடை வந்து கொண்டே இருக்கிறது, எட்டுக்கால் பூச்சியும் , கரப்பான் பூச்சிகளும் ஒழிந்ததாக சிரத்திரமே இல்லை ஒருபுறம் எறும்புப் புற்று மறுப்பும் கரையான் புற்றுக்கள் . வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X