பொது செய்தி

இந்தியா

எல்லை நிலப்பரப்பை பாதுகாக்க புதிய சட்டம்

Updated : அக் 26, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பீஜிங்-கிழக்கு லடாக்கில் இந்திய - சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தன் எல்லை நிலப்பரப்புகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது,நம் அண்டை நாடான சீனா.நம் அண்டை நாடான சீனா, 14 நாடுகளுடன் 22 ஆயிரம் கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில், 12 நாடுகளுடன் எல்லை தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா

பீஜிங்-கிழக்கு லடாக்கில் இந்திய - சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தன் எல்லை நிலப்பரப்புகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது,



latest tamil news


நம் அண்டை நாடான சீனா.நம் அண்டை நாடான சீனா, 14 நாடுகளுடன் 22 ஆயிரம் கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில், 12 நாடுகளுடன் எல்லை தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பூட்டானுடனான பிரச்னைகள் மட்டும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகின்றன.ஒப்புதல்இந்தியா மற்றும் சீனா, 3,488 கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. கிழக்கு லடாக்கில், கடந்தாண்டு மே மாதத்தில் சீன ராணுவத்தின் அத்துமீறி நுழையும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

அதையடுத்து, எல்லையில், இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுமான பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.அதே போல், 400 கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பூட்டான் உடனான எல்லையிலும் பல கட்டுமான பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.இந்த சூழ்நிலையில், சீனா புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. சீனாவின் பார்லிமென்டான தேசிய மக்கள் காங்கிரசில் இந்த புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2022 ஜன., 1 முதல் இது அமலுக்கு வருகிறது.

'நாட்டின் இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு என்பது புனிதமானது மற்றும் மீற முடியாதது' என, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதிகாரம்இந்த புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் எல்லை மற்றும் நிலப்பரப்பை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, எல்லை பகுதிகளில் புதிய கிராமங்கள் உருவாக்குவது உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளலாம். அங்கு மக்கள் வசிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ளலாம்.அண்டை நாடுகளுடன் உள்ள எல்லைப் பிரச்னைகளுக்கு பேச்சின் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இந்தியாவுடன் எல்லை பிரச்னை உள்ள நிலையில், இந்த புதிய சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.வீரர்களுக்கு கவுரவம்கிழக்கு லடாக் எல்லையில், சீன படைகளுக்கு எதிராக நடந்த மோதலின்போது, சிறப்பாக செயல்பட்ட, ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையைச் சேர்ந்த 20 வீரர்களுக்கு, வீரதீர விருது வழங்கப்பட்டது.நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி இந்த விருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

டில்லியில் நேற்று நடந்த, படையின் 60வது நிறுவன நாள் விழாவில், இந்த விருதுகளை, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார். அப்போது அவர், 'இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையில் கூடுதல் பட்டாலியன் விரைவில் இணைக்கப்படும்' என்றார்

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-202115:01:17 IST Report Abuse
சம்பத் குமார் 1). சீனாவின் இந்த புதிய சட்டம் நமக்கு இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்துகின்றது.2). முதலாவது சீனா இந்தியாவின் Navy மற்றும் Airforce மற்றும் சாட்டிலைட் தொழில்நுட்ப திறனையை பார்த்து அச்சம் கொள்கிறது. நம்மையை பார்த்து பயப்படுக்கிறது.3).இறுதியாக தன்னுடைய மக்களை தான் ஆக்ரமித்த 1969 வரையான நிலங்களில் குடியேற செய்தால் வரும் காலத்தில் இந்தியா அந்த நிலப்பரப்பில் உரிமை கொண்டாட முடியாது. நன்றி ஐயா.
Rate this:
Cancel
25-அக்-202110:26:58 IST Report Abuse
அப்புசாமி இதுக்கும், நாம் சமாளிக்கத்தயார்னு ஒரு அறிவிப்பை மூணு தளபதிகளும், ஒரு மந்திரியும் வெளியிடுவார்கள். நாம் எப்போது அங்கே கட்டுமானங்களை கட்டி, நமது பிரதேசங்களைப் பாதுகாக்கப் போகுறோம்?
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
25-அக்-202109:48:11 IST Report Abuse
Hari இந்த உலகத்திற்கு ஒரு சோதனையாக சீன இருக்கிறது ,ஹிட்லர் முசோலினி,இடிஅமீன் ,சுடாலின் வரிசைல இப்போது ஜின்பிங் .உலகம் தாங்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X