கமலா ஹாரிஸின் இட்லி மீதான விருப்பம்; புத்தகத்தில் வெளியான தகவல்

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
வாஷிங்டன்-சிறு வயது முதல், அமெரிக்கா துணை அதிபராக பதவியேற்றது வரையிலான கமலா ஹாரிசின், 57, வாழ்க்கையை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.இதில் கமலா அய்யர் என்ற பெயர், கமலா ஹாரிசாக மாறியது; இட்லி, தோசை மீதான அவரது விருப்பம் போன்ற விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க துணை அதிபராக இந்தாண்டு ஜன.,ல் பதவியேற்றார் கமலா ஹாரிஸ். ஆப்ரிக்க தந்தை,

வாஷிங்டன்-சிறு வயது முதல், அமெரிக்கா துணை அதிபராக பதவியேற்றது வரையிலான கமலா ஹாரிசின், 57, வாழ்க்கையை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.



latest tamil news


இதில் கமலா அய்யர் என்ற பெயர், கமலா ஹாரிசாக மாறியது; இட்லி, தோசை மீதான அவரது விருப்பம் போன்ற விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க துணை அதிபராக இந்தாண்டு ஜன.,ல் பதவியேற்றார் கமலா ஹாரிஸ். ஆப்ரிக்க தந்தை, இந்திய தாய்க்கு பிறந்த அவர், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்

.கமலா ஹாரிசின் வாழ்க்கையை விளக்கும் வகையில், இந்தியாவை பூர்வீகமாக உடைய பிரபல பத்திரிகையாளர் சித்தானந்த ராஜ்கட்டா ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மொத்தம், 300 பக்கங்கள் உடைய இந்த புத்தகம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

கமலா ஹாரிசின் தாய் ஷியாமளா கோபாலன் தமிழகத்தைச் சேர்ந்தவர். படிப்பதற்காக அமெரிக்கா சென்ற அவர், உடன் படித்த ஆப்ரிக்காவைச் சேர்ந்த டொனால்டு ஹாரிசை திருமணம் செய்தார். அதே காலகட்டத்தில் ராஜ்கட்டாவின் தந்தையும் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்றார்.


latest tamil news


ஷியாமளா கோபாலனின் அமெரிக்க வாழ்க்கையில் துவங்கி, கமலா ஹாரிசின் சிறு வயது அனுபவங்கள், அவருடைய விருப்பங்கள் உள்ளிட்டவை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.கமலா ஹாரிஸ் பிறந்த போது அவரது பிறப்பு சான்றிதழில், முதலில் கமலா அய்யர் ஹாரிஸ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின் அது கமலா தேவி ஹாரிஸ் என மாற்றப்பட்டுள்ளதாக புதிய தகவலும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலாவின் சமையல் விருப்பம், இட்லி, தோசை மீதான காதல் போன்ற சுவாரஸ்ய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அரசியலில் வெற்றி பெற பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், போட்டிகள் குறித்து கமலா ஹாரிஸ் கூறியுள்ளவையும் இடம்பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
25-அக்-202116:21:29 IST Report Abuse
DVRR குழந்தாய் உன்னுடைய தலை ஜோ பிடன் ("அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செல்வாக்கு கடும் சரிவு" இன்றைய சுட சுட செய்தி) அவரை நன்றாக பார்த்துக்கொள் இல்லேன்னா இட்லி இல்லே பர்கர் கிடைப்பது கூட உனக்கு கஷ்ட்டமாயிரும்
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
25-அக்-202115:33:04 IST Report Abuse
Sandru உங்கள் செய்தி முழுமை பெறவில்லை. கமலா ஹாரிஸுக்கு இட்லி உடன் மாட்டு கரி மிக பிடித்தமான உணவு.
Rate this:
Cancel
25-அக்-202114:38:23 IST Report Abuse
சம்பத் குமார் 1). பிராமணர்கள் தலை சிறந்த குணம் கொண்டவர்கள்.2). எல்லாவகையிலும் பிளஸ் ஆர் மைனஸ் இருந்தாலும் அவரேஜாக நல்லவர்கள்.3). கமலா ஹாரிஸ் அந்த வகையில் சரிதான்.4). ஆனால் நமக்கு இப்போது இது முக்கியல்லை.5). அப்படியே இருந்தாலும் தி.க. மற்றும் திமுக விற்கு பிடிக்காதவர் என்பதை நாம் உணர வேண்டும். நன்றி ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X