பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் கொலை வழக்கில் கைதான அமைச்சர் மகனுக்கு டெங்கு

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
லக்கிம்பூர் கெரி-விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 'டெங்கு' காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லக்கிம்பூர் கெரி என்ற இடத்தில் சமீபத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

லக்கிம்பூர் கெரி-விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 'டெங்கு' காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது.



latest tamil news


உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லக்கிம்பூர் கெரி என்ற இடத்தில் சமீபத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.


latest tamil news


இந்த சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக, ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-அக்-202118:47:54 IST Report Abuse
D.Ambujavalli நாலு நாள் சிறைவாசம் பொறுக்காமல், மருத்துவமனையில் கூட்டம் கூட்டி, கும்மாளம் போட்டுகையோடு ஜாமீனும் வாங்கி கேஸை அமுக்கி என்று பரபரப்பாக a நடத்தி விடுவார்கள் ஆளும் கட்சி அமைச்சராச்சே அப்பா, இதுகூட செய்ய மாட்டாரா ?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
25-அக்-202116:51:19 IST Report Abuse
DVRR 2 விவசாயிகளை கொலை செய்தவர்கள் கைது . OK???ஆமா அவர்களை தவிர்த்து மற்றும் 7 பேர் - ஒரு பத்திரிகையாளர் உட்பட கொலை செய்யப்பட்டார்கள் அதற்கு எவ்வளவு விவசாயிகளை கைது செய்துள்ளீர்கள் என்று விவரம் தந்தால் உண்மை விளங்கும்??என்னாது அதில் விவசாயிகள் இல்லையா ??ஏன் ???அந்த கூட்டத்தில் விவசாயிகள் மட்டும் தானே இருந்தார்கள் என்று எவ்வளவு டப்பா அடித்தார்கள் இல்லை தப்பாக அடித்தார்களா???? இப்போ இவனுக்கு கொரோன என்றால் யாரும் நம்பமாட்டார்கள் என்று டெங்கு என்று செய்தி வந்துள்ளதா???
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
25-அக்-202116:23:50 IST Report Abuse
Samathuvan ஐயோ பாவம், அது எந்த மருத்துவமனைன்னு சொன்னா இந்த விவசாயிகளுக்கு ரொம்ப பேருதவியா இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X