சத்தீஸ்கர் காங்.கில் கோஷ்டி மோதல்

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ராய்ப்பூர்-சத்தீஸ்கரில் ஆளும் காங்., கட்சிக்குள் கோஷ்டி மோதல் தீவிரமடைந்துள்ளது. சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங் தியோவுக்கு ஆதரவாக பேச முயன்ற பிரமுகரை, எதிர் கோஷ்டியினர் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்றனர்.சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. காங்., அரசு அமைந்துள்ள மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தானை தொடர்ந்து, சத்தீஸ்கரிலும் கோஷ்டி

ராய்ப்பூர்-சத்தீஸ்கரில் ஆளும் காங்., கட்சிக்குள் கோஷ்டி மோதல் தீவிரமடைந்துள்ளது. சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங் தியோவுக்கு ஆதரவாக பேச முயன்ற பிரமுகரை, எதிர் கோஷ்டியினர் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்றனர்.



latest tamil news


சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. காங்., அரசு அமைந்துள்ள மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தானை தொடர்ந்து, சத்தீஸ்கரிலும் கோஷ்டி மோதல் தீவிரமாக உள்ளது.சுகாதார அமைச்சராக உள்ள சிங் தியோ மற்றும் பூபேஷ் பாகேல் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பூபேஷ் பாகேலை நீக்கி, சிங் தியோவை முதல்வராக்க வேண்டும் என, காங்., எம்.எல்.ஏ.,க்கள் பலர், கட்சி தலைமைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில் ஜஸ்புரில் கட்சியின் கூட்டம் நேற்று நடந்தது. அதில், சிங் தியோவுக்கு ஆதரவாக, முன்னாள் மாவட்டத் தலைவர் பவண் அகர்வால் பேசினார். உடனே, எதிர் கோஷ்டியினர் மேடையேறி, அவரை குண்டுக்கட்டாக துாக்கி கீழே இறக்கினர்.இது தொடர்பான, 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-202111:16:56 IST Report Abuse
ஆரூர் ரங் அஹிம்சை போதித்த மஹாத்மா காந்திக்கு ஜெ😇. பருத்திப்பால்
Rate this:
Cancel
25-அக்-202108:24:05 IST Report Abuse
பேசும் தமிழன் அருமை... எது எப்படியோ.... கூடிய விரைவில் கான் கிராஸ் இல்லாத இந்தியா என்ற நிலை வர வேண்டும்... அது தான் நாட்டுக்கு நல்லது
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
25-அக்-202108:15:32 IST Report Abuse
VENKATASUBRAMANIAN காங்கிரஸ் ல் கோஷ்டி மோதல் இல்லாத மாநிலம் உண்டா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X