பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: விளம்பரமாக இருக்கக் கூடாது

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ச.கந்தசாமி, எட்டயபுரம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:தமிழக காவல் துறை அதிரடியாக நடத்தி வரும், 'ஸ்டாமிங் ஆப்பரேஷன்' மூலம் இதுவரை 3,500க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனராம். அவர்களிடமிருந்து துப்பாக்கி, கையெறி வெடிகுண்டு, கத்தி,
இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



ச.கந்தசாமி, எட்டயபுரம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

தமிழக காவல் துறை அதிரடியாக நடத்தி வரும், 'ஸ்டாமிங் ஆப்பரேஷன்' மூலம் இதுவரை 3,500க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனராம். அவர்களிடமிருந்து துப்பாக்கி, கையெறி வெடிகுண்டு, கத்தி, அரிவாள் உட்பட எண்ணற்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலினையும், காவல் துறையினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.ரவுடி பட்டியலில் உள்ளோர் சாதாரண நபர்கள் அல்ல; அவர்கள் கொலைக்கு அஞ்சாதோர், மக்களை அச்சுறுத்துவோர், அடிதடி, கடத்தல் என, குற்றச் செயல்களில் 'பட்டம்' வாங்கியோர். பெரு நகரங்களில் இவர்களது சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கும். சில ரவுடிகள், போலீசாருக்கே மிரட்டல் விடுவதுண்டு.இரு ரவுடி கோஷ்டிகள் இடையே போட்டி ஏற்பட்டால், அப்பகுதியே ரத்தக்களறியாக மாறும். பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவர்.

சட்டம் - ஒழுங்கு மிக மோசமாகும்.கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பேரும், மழைக் காலத்தில் தோன்றும் காளான்கள் போல் புதிதாகவா முளைத்தனர்?இல்லை... வழிப்பறி, அடிதடி, கொள்ளை, கொலை என படிப்படியாக கொடூரச் செயல்களில் ஈடுபட்டு, ரவுடியாக மாறினர். அவர்கள் ரவுடியாக மாறும் வரை, காவல் துறையினர் வேடிக்கை பார்த்தனரே ஏன்?அதற்கு காரணம், அந்த ரவுடிகள் எல்லாம் அரசியவாதிகளின் பினாமிகள் என்பது தான்.


latest tamil news


அரசியல்வாதிகளுக்கு ரவுடிகளின் ஒத்துழைப்பு தேவை; ரவுடிகளுக்கு அரசியல் வாதிகளின் தயவு தேவை. இருவரும் சேர்ந்து, நாட்டை நாசமாக்கி வருகின்றனர்.இன்று, ஆட்சி அதிகாரத்தில் இருப்போரில் பலரும், ஒரு காலத்தில் தாதாக்களாக நடமாடியோர் தான்!போலீசார், தங்கள் உயிரை பணயம் வைத்து ரவுடிகளைப் பிடித்தாலும், அவர்கள் அடுத்த சில நாட்களில் விடுதலையாகி வெளிவந்து விடுவர். ஆட்சியாளர்களுக்கும், ரவுடிகளுக்கும் நெருக்கம் இருக்கும் வரை, சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக தான் இருக்கும்.ரவுடிகள் கைது என்பது வெறும் விளம்பரமாக இல்லாமல், சமுதாயத்தைச் சீரழிக்கும் நச்சு செடிகளை களையெடுப்பதாக அமையட்டும்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
25-அக்-202119:55:05 IST Report Abuse
Nagercoil Suresh நம்முடைய டிஜிபி ஆப்பரேஷனுக்கு ஆப்பரேஷன் செய்தவர் அவரிடம் இந்த சில்லறை ரௌடிகளின் வேலைகள் பலிக்காது, கிராமங்களில் தவறு செய்பவர்களை பார்த்து சிறைய கடலில் அழியாதது பெரிய கடலில் அழியும் என்பார்கள் இனிமேல் அதே நிலை தான் ரௌடிகளுக்கு ...கந்தசாமியின் கட்டுரை உண்மையை உரக்க சொல்லியுள்ளார் சூப்பர்...
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
25-அக்-202114:07:08 IST Report Abuse
vpurushothaman அரசியல்வாதிகள் ரவுடிகளில்லை. ரவுடிகளின் கையில்தான் அரசியல் வாழ்கிறது. இது மாற வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-அக்-202113:38:27 IST Report Abuse
Ramesh Sargam ரவுடிகள் எல்லாம் அரசியவாதிகளின் பினாமிகள் என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அவர்களை ஊக்குவித்து, வாழவைப்பதே இந்த கேடுகெட்ட அரசியல்'வியாதிகள்'தான்... ஆகையால், ரவுடிகளை பிடித்து சிறையின் உள்ளெ வைப்பதால் ஒரு பலனும் இல்லை. அவர்களை ஆதரிக்கும் இந்த அரசியல்'வியாதிகளையும்' பிடித்து உள்ளே வைத்தால், அது சிறப்பான செயல். நடக்குமா...?
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
25-அக்-202114:26:21 IST Report Abuse
Dhurveshஇந்த ஜெனோதயம் விகாஸ் துபே என்கிற ரவுடி வைத்து UP யை கலக்கி கொண்டு இருந்தாரே amithsha அவரிடம் சொல்லவேண்டியது தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X