இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்':ரூ.8 கோடி 'அம்பர் கிரீஸ்' கடத்திய இருவர் கைது

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்மும்பையில் டாக்டர் கைதுமும்பை: மஹாராஷ்டிர தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியில், 'கிளினிக்' ஒன்றை, 40 வயதான 'பிசியோெதரபி' டாக்டர் ஒருவர் நடத்தி வந்தார். இவரின் கிளினிக்கில், சில உடல் குறைபாடுகளுடன் மாற்றுத் திறனாளி மைனர் சிறுமி, 16, பயிற்சி பெற்று வந்துள்ளார். இவரை கடந்த ஓராண்டாக, அந்த டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தற்போது
இன்றைய கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்

மும்பையில் டாக்டர் கைது

மும்பை: மஹாராஷ்டிர தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியில், 'கிளினிக்' ஒன்றை, 40 வயதான 'பிசியோெதரபி' டாக்டர் ஒருவர் நடத்தி வந்தார். இவரின் கிளினிக்கில், சில உடல் குறைபாடுகளுடன் மாற்றுத் திறனாளி மைனர் சிறுமி, 16, பயிற்சி பெற்று வந்துள்ளார். இவரை கடந்த ஓராண்டாக, அந்த டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தற்போது அம்பலமாகி உள்ளது. அந்த சிறுமி அளித்த புகார் அடிப்படையில், அந்த டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பனிச்சரிவு: 5 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பல பகுதிகளில், கடந்த சில நாட்களாக அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இங்குள்ள அனந்தநாக் மாவட்டத் தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த மீட்புப் படையினர் அதில் சிக்கி இருந்த மேலும் சிலரை உயிருடன் மீட்டனர். இதையடுத்து பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை, ஐந்தாக உயர்ந்து உள்ளது.

சிலையில் கால் வைத்தவர் கைது

நாகோன்: அசாமின் நாகோன் மாவட்டத்தில் அர்லாங் குண்ட் என்ற ஓடைக்கு அருகே ஒரு பழமையான விநாயகர் சிலை உள்ளது. சமீபத்தில் அங்கு சென்ற ஒரு இளைஞர், அந்த சிலை மீது கால் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், அதை தன் சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்


தமிழக நிகழ்வுகள்

வேன் மீது பஸ் மோதல் ஓட்டுனர் உயிரிழப்பு

பூந்தமல்லி : குன்றத்துார் அருகே, வேன் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், வேன் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரவாயல், ஜானகி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 47; வேன் ஓட்டுனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் நோக்கி, வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார்.குன்றத்துார் அடுத்த வடக்கு மலையம்பாக்கம் அருகே சென்றபோது, வேன் திடீரென பழுதானது. இதையடுத்து, வாகனத்தை சாலையின் ஓரம் நிறுத்தி, சரி செய்து கொண்டிருந்தார்.அப்போது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ், வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில், ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.வேனின் பின் பகுதியும், பஸ்சின் முன் பகுதியும் நொறுங்கின. இது குறித்து விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் ஓட்டுனரான பிலவேந்திரன், 40, என்பவரை கைது செய்தனர்.


latest tamil news



இளம்பெண் தற்கொலை: கணவன், மாமனார் கைது
அனுப்பர்பாளையம்:குன்னத்துார், தொரவலுார் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்; இவரது மகன் பிரபு, 26, பனியன் தொழிலாளி. நான்கு ஆண்டுகள் முன் நவ காடு கிராமம், ஒருக்காம் பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தினி, 23, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.பிரபுக்கு குடிப்பழக்கம் உள்ளது. குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்வதில்லை. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மாமனார் ஆறுமுகம், மருமகள் நந்தினிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.விரக்தி அடைந்த நந்தினி, கடந்த செப்., 30ம் தேதி வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.குன்னத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வந்தது.நந்தினி, தற்கொலைக்கு காரணமான கணவன், மாமனாரை கைது செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தற்கொலைக்கு துாண்டியதாக கணவன் பிரபு, அவரது தந்தை ஆறுமுகம், 55, ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதியவரிடம் நூதன முறையில் நகை திருட்டு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வங்கியில் இருந்து நகையை மீட்ட முதியவர் ராமசாமியிடம் 66, நுாதன முறையில் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். -

ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டையைச் சேர்ந்தவர் ராமசாமி 66. ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே வங்கி ஒன்றில் அடகு வைத்த நாலரை பவுன் நகையை திரும்ப பெற்று வீடு திரும்பினார். பஸ்ஸ்டாண்டில் காத்திருந்தபோது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்தார். ''தான் தேவத்தூர் செல்வதாகவும், பெரியகோட்டையில் இறக்கி விடுவதாகவும்'' கூறியுள்ளார்.

முதியவர் ராமசாமி அவருடன் பயணம் செய்தார். தாராபுரம் ரோட்டில் சென்றபோது அந்தநபர், ''உங்கள் நகை சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்'' என கூறியுள்ளார். முதியவர் நகையை எடுத்தபோது, 'இப்படியா பாதுகாப்பு இல்லாமல் வைப்பது' என்று கூறி, நகையை பேப்பரில் மடித்து கொடுத்துள்ளார்.

சிறிது தூரத்தில் முதியவரை இறக்கிவிட்டு சென்றார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர் வராததால், வீட்டுக்குச் சென்ற ராமசாமி, பொட்டலத்தை பிரித்து பார்த்து அதிர்ந்தார். அதில் வெறும் கல் மட்டுமே இருந்துள்ளது. ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news


டெங்கு காய்ச்சல் பாதிப்பு: பள்ளி மாணவி உயிரிழப்பு

காஞ்சிபுரம் : ஞ்சிபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி, 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

காஞ்சிபுரம், கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகள் ஸ்ருதி, 12; தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்காக, 17ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உடல் நிலை மிகவும் மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவி ஸ்ருதி இறந்தார். அவர், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


ரூ.8 கோடி 'அம்பர் கிரீஸ்' கடத்திய இருவர் கைது

திருவாரூர்-முத்துப்பேட்டை அருகே, 8 கோடி ரூபாய் மதிப்பிலான, 'அம்பர் கிரீஸ்' என்ற திமிங்குல எச்சத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்கள், மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இது, 'அம்பர் கிரீஸ்' என அழைக்கப்படுகிறது. கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர் கிரீஸ் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.சர்வதேச சந்தையில் 1 கிலோ, 1 கோடி ரூபாய்க்கு விலை போகிறது. இந்தியாவில் இதை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் இருந்து, அம்பர் கிரீஸ் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருத்துறைப்பூண்டி- - முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில், நேற்று முன்தினம் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, இருசக்கர வாகனம் ஒன்றை சோதனையிட்டதில், 8 கிலோ அம்பர் கிரீஸ் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட நிஜாமுதீன், 52; ஜாகீர் உசேன், 54 இருவரையும் கைது செய்தனர்.


உலக நிகழ்வுகள்

15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

கராச்சி: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாக்., ராணுவ வீரர்கள் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின் அவர்களிடம் இருந்த ஆயுதங்களும், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

'ஸ்பிரே' பயன்படுத்திய 2 பேர் பலி

நியூயார்க்: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் ஒரு 'அரோமாதெரபி ரூம் ஸ்பிரே' அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், அந்த ஸ்பிரேவை உபயோகித்ததால், நான்கு பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதில், இரண்டு பேர் உயிரிழந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது. அந்த ஸ்பிரேவை ஆய்வு செய்ததில், அதில் ஒரு வகையான 'பாக்டீரியா' இருந்தது அம்பலமாகி உள்ளது. இதை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X