மீனவருக்கு கடன் அட்டை; அமைச்சர் முருகன் தகவல்

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஐதராபாத்-''விவசாயிகளுக்கு வழங்கப்படும் 'கிசான் கிரெடிட் கார்டு' போல, விரைவில் மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்படும்,'' என, மத்திய மீன் வளத் துறை இணையமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் தேசிய மீன்துறை வளர்ச்சி வாரியத்தின் செயல்பாடுகளை, மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று ஆய்வு செய்தார்.இதைத் தொடர்ந்து அவர்

ஐதராபாத்-''விவசாயிகளுக்கு வழங்கப்படும் 'கிசான் கிரெடிட் கார்டு' போல, விரைவில் மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்படும்,'' என, மத்திய மீன் வளத் துறை இணையமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.



latest tamil news


தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் தேசிய மீன்துறை வளர்ச்சி வாரியத்தின் செயல்பாடுகளை, மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று ஆய்வு செய்தார்.இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் அவசர தேவைக்காக குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. அதுபோல விரைவில் மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்படும்.


latest tamil news


இதனால் மீனவர்கள் பயன் பெறுவர். கடல்சார் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஐந்து மீன்பிடித் துறைமுகங்களில் பதப்படுத்தும் பிரிவுகள், குளிர்சாதன கிடங்குகள் ஆகியவற்றை அமைத்து சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடற்பாசி உற்பத்தியை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் விரைவில் கடற்பாசி பூங்கா அமைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-202119:52:20 IST Report Abuse
அப்புசாமி கடன் அட்டை வாணாம். கடல் அட்டை குடுங்க.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
25-அக்-202114:19:31 IST Report Abuse
pradeesh parthasarathy விவசாயிகளுக்கு அறிவித்த கடன் அட்டை நிறுத்தப்பட்டுள்ளது . ஆனால் விளம்பரத்திற்கு ஒரு குறைவும் இல்லை ... முதலில் ஏற்கனவே அறிவித்தவற்றை சரியாக கொடுங்கள் ...
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
25-அக்-202112:24:49 IST Report Abuse
Dhurvesh இந்த திருட்டு பசங்கள் நிவாரணம் மீனவர்கள் கேட்டல் கடன் அட்டை தாரங்களாம் , அதாவது வட்டிக்கு பணம் வாங்கி கொள்ளுங்கள் என்கிறார் இதற்க்கு ஒரு மந்திரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X