புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.
கவர்னர் தமிழிசை தலைமை தாங்கி, 'நாங்க போட்டுக் கொண்டோம், நீங்க போட்டுக் கொண்டீர்களா' என்ற கொரோனா விழிப்புணர்வு காணொலியை வெளியிட்டார்.சுகாதாரத் துறை செயலர் அருண், இயக்குனர் ஸ்ரீராமுலு, கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, கல்வித் துறை இயக் குநர் ருத்ரகவுடு, போக்குவரத்து, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட அரசு சாரா தன்னார்வ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், கவர்னர் தமிழிசை பேசியதாவது;இந்தியா பாதுகாப்பான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவில் 102 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. நாம் பாதுகாப்பாக இருப்பதற்கு தடுப்பூசி செலுத்தியதே காரணம்.புதுச்சேரியிலும் தடுப்பூசி செலுத்த பல்வேறு முயற்சிகளை அரசு மேற் கொண்டு வருகிறது. அதன் பயனாக தடுப்பூசி செலுத்தியோர் விகிதம் 75சதவீதத்தை கடந்து 80ஐ நோக்கி செல்கிறது.விடுபட்டுள்ள சுமார் இரண்டு லட்சம் நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான அணுகுமுறையை திட்டமிட்டு வருகிறோம்.இன்று 25ம் தேதி காலை 8:00 மணி முதல்
இரவு 8:00 மணி வரை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ளது.ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஏற்பாடு செய்து வருகிறோம். சுகாதாரத் துறையுடன் பிற அரசுத் துறைகள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் இணைந்து பணியாற்ற உள்ளன. மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement