தாதா சாகேப் பால்கே விருது பெற ரஜினி தன் குடும்பத்தினருடன் டில்லி பயணம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தாதா சாகேப் பால்கே' விருது பெற ரஜினி தன் குடும்பத்தினருடன் டில்லி பயணம்

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (31)
Share
சென்னை---டில்லியில் இன்று நடக்கும் விழாவில், நடிகர் ரஜினிக்கு, இந்திய திரைத்துறையின் உயரிய விருதான, 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்படுகிறது.விருதை பெறுவதற்காக ரஜினி நேற்று பேரக்குழந்தைகளுடன் டில்லி சென்றார்.தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு, இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா

சென்னை---டில்லியில் இன்று நடக்கும் விழாவில், நடிகர் ரஜினிக்கு, இந்திய திரைத்துறையின் உயரிய விருதான, 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்படுகிறது.



latest tamil news


விருதை பெறுவதற்காக ரஜினி நேற்று பேரக்குழந்தைகளுடன் டில்லி சென்றார்.தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு, இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.இந்த விருதை பெற நேற்று காலை 11:00 மணிக்கு சென்னையில் இருந்து, விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில், ரஜினி டில்லி சென்றார். அவருடன், அவரின் மனைவி லதா, பேரக்குழந்தைகள், உதவியாளர்கள் என எட்டு பேர் சென்றனர்.உள்நாட்டு விமான நிலையத்தின் ஒன்றாம் எண் நுழைவாயில் வழியாக ரஜினி செல்வார் என்று எதிர்பார்த்து, அவரது ரசிகர்கள் பலர் நேற்று காலை அந்த வாயிலில் காத்திருந்தனர்.

ஆனால், நான்காம் எண் நுழைவாயில் வழியாக ரஜினி உள்ளே சென்று விட்டார். இதனால், காத்திருந்த ரசிகர்கள் பலர், ரஜினியை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.ஒரு சில ரசிகர்கள் மட்டும், நான்காம் எண் நுழைவாயிலுக்கு விரைந்து சென்று, ரஜினிக்கு ஆதரவாக வாழ்த்து கோஷங்கள் எழுப்பி வழியனுப்பினர்.முன்னதாக நடிகர் ரஜினி, அவரது போயஸ் கார்டன் இல்லத்தின் வாயிலில், நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.


latest tamil news


அப்போது, ''திரை உலகின் மிக உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது எனக்கு கிடைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.இந்த நேரத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தர் என்னுடன் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மேலும், நடிகர் ரஜினி, தன் 'டுவிட்டர்' பதிவில், 'இன்று எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள். ஒன்று தாதா சாகேப் பால்கே விருது; மற்றொன்று என் மகள் சவுந்தர்யா விசாகனின் சொந்த முயற்சியில், 'ஹூட்-' என்ற 'ஆப்' வெளியிடப்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க, நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் நேற்று காலை 7.10 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டில்லி சென்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X