பொது செய்தி

இந்தியா

நீர் மேலாண்மை திட்டத்திற்கு ரூ.6.8 கோடி நிதியுதவி ஆய்வு கூட்டத்தில் புதுச்சேரி அதிகாரிகள் வலியுறுத்தல்

Added : அக் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த ரூ.6.8 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என பெங்களூருவில் நடந்த தென்மண்டல அளவிலான ஆய்வு கூட்டத்தில் புதுச்சேரி அதிகாரிகள் வலியுறுத்தினர்.எதிர்கால தண்ணீர் தேவையை கவனத்தில் கொண்டு நீர் வளத்தை பாதுகாப்பது, நீரின்தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட நோக்கத்திற்காக தேசிய நீரியல் திட்டத்தைமத்திய அரசு


புதுச்சேரி : புதுச்சேரியில் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த ரூ.6.8 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என பெங்களூருவில் நடந்த தென்மண்டல அளவிலான ஆய்வு கூட்டத்தில் புதுச்சேரி அதிகாரிகள் வலியுறுத்தினர்.எதிர்கால தண்ணீர் தேவையை கவனத்தில் கொண்டு நீர் வளத்தை பாதுகாப்பது, நீரின்தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட நோக்கத்திற்காக தேசிய நீரியல் திட்டத்தைமத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி நீர்வள பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், வரும் 2024ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு களுக்கு ரூ.14.30 கோடி புதுச்சேரிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.மாநிலங்களில் நீர் வள மேலாண்மை திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக, தென்மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் பெங்களூரில் கடந்த இரண்டு நாட்கள் நடந்தது. மத்திய நீர்வள அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுபோப் யாதவ் தலைமை தாங்கினார்.புதுச்சேரி சார்பில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, பொது சுகா தார கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், நீரியல் வல்லுநர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று,

புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து விளக்கினர்.புதுச்சேரியில் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதற்கு உடனடியாக ரூ. 6.8 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். முதல்கட்டமாக, ரூ.1 கோடியை உடனே வழங்குவதாக தேசிய நீரியல் திட்ட அதிகாரிகள் கூறினர்.இதையடுத்து புதுச்சேரியில் நீர் மேலாண்மை தொடர்பான திட்டங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X