தமிழகத்தில் 90 அணைகளில் 73 சதவீதம் நீர் இருப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 90 அணைகளில் 73 சதவீதம் நீர் இருப்பு

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (7)
Share
சென்னை-வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்னரே, தமிழகத்தில் உள்ள 90 அணைகளில், 73 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.நீர்வளத்துறை பராமரிப்பில் மாநிலம் முழுதும், 224 டி.எம்.சி., கொள்ளளவு உடைய, 90 அணைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகின்றன.இதில், பல அணைகள், வனவிலங்குகள், பறவைகளின் நீராதாரமாகவும் இருந்து வருகின்றன. தென்மேற்கு பருவமழை

சென்னை-வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்னரே, தமிழகத்தில் உள்ள 90 அணைகளில், 73 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.நீர்வளத்துறை பராமரிப்பில் மாநிலம் முழுதும், 224 டி.எம்.சி., கொள்ளளவு உடைய, 90 அணைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகின்றன.latest tamil news


இதில், பல அணைகள், வனவிலங்குகள், பறவைகளின் நீராதாரமாகவும் இருந்து வருகின்றன. தென்மேற்கு பருவமழை தொடர்ந்த நிலையில், செப்டம்பர் மாத இறுதியில், அணைகளில் 60 சதவீதம் மட்டுமே நீர் இருந்தது. இம்மாதம் பல மாவட்டங்களின் கனமழை கொட்டி தீர்த்ததால், நீர் இருப்பு 73 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்தமாக, 163 டி.எம்.சி., நீர் கையிருப்பு உள்ளது.

அதிகபட்சமாக சேலம் மேட்டூர் அணையில் 64.2; ஈரோடு பவானிசாகரில் 30.3; கோவை பரம்பிக்குளத்தில் 13; தேனி முல்லைபெரியாறில் 6.32; திருநெல்வேலி பாபநாசத்தில் 5.16 டி.எம்.சி.,யும் நீர் இருப்பு உள்ளது. பல அணைகள் நிரம்பியுள்ளதால், அவற்றில் இருந்து உபரி நீரை வெளியேற்றும் பணியும் நடந்து வருகிறது.


latest tamil news


இவ்வளவு மழை கொட்டியும், தர்மபுரி மாவட்டம் தும்பளஹள்ளி; விருதுநகர் மாவட்டம் ஆனைகுட்டம், கோல்வார்பட்டி, இருக்கன்குடி; திருப்பூர் மாவட்டம் வட்டமலைக்கரை ஓடை; அரியலுார் மாவட்டம் சித்தாமல்லி;திருச்சி மாவட்டம் உப்பாறு; திண்டுக்கல் மாவட்டம் கொடகனாறு, சிறுமலையாறு ஓடை; கோவை மாவட்டம் அப்பர் நிரார்; திருநெல்வேலி மாவட்டம் வண்டல் ஓடை ஆகிய அணைகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X