அட்வர்டைசிங் போட்டோகிராபியில் அசத்தும் விக்னேஷ்..| Dinamalar

அட்வர்டைசிங் போட்டோகிராபியில் அசத்தும் விக்னேஷ்..

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021
Share
பத்திரிகையை புரட்டும் போது சில விளம்பரங்கள் மீது நம் கவனம் அதிகம் விழும் காரணம் அந்த விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டு உள்ள புகைப்படம்.இப்படி விளம்பரங்களுக்கு உயிர்தரும் புகைப்படத்தை எல்லோராலும் எடுத்துவிட முடியாது கடுமையான உழைப்பையும் அறிவையும் அபரிமிதமாக தரவேண்டும்.இந்தியாவில் முழுவதும் உள்ள முன்னனி நிறுவனங்கள் தங்களது பொருளை படம்latest tamil news


பத்திரிகையை புரட்டும் போது சில விளம்பரங்கள் மீது நம் கவனம் அதிகம் விழும் காரணம் அந்த விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டு உள்ள புகைப்படம்.


latest tamil news


இப்படி விளம்பரங்களுக்கு உயிர்தரும் புகைப்படத்தை எல்லோராலும் எடுத்துவிட முடியாது கடுமையான உழைப்பையும் அறிவையும் அபரிமிதமாக தரவேண்டும்.


latest tamil news


Advertisement

இந்தியாவில் முழுவதும் உள்ள முன்னனி நிறுவனங்கள் தங்களது பொருளை படம் எடுக்க பெரும்பாலும் மும்பையில் உள்ள புகைப்படக் கலைஞர்களையே அணுகுவர்.அப்படி அணுகக்கூடிய புகைப்படக்கலைஞர்களில் ஒருவர்தான் எம்.கே.விக்னேஷ்.


latest tamil news


மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பறந்து பறந்து போட்டோ ஷூட் செய்யும் விக்னேஷ் ஒரு தமிழர்.சென்னையைச் சேர்ந்தவர் பள்ளிப்படிப்பை முடித்து மருத்துவம் பொறியியல் என்று எந்த உயர்கல்விக்கும் எளிதாக செல்லக்கூடிய அளவிற்கு மதிப்பெண் எடுத்திருந்தார் ஆனால் இவர் தனது விருப்பமான போட்டோகிராபியை தேர்ந்து எடுத்தார்.


latest tamil news


இதற்காக புனே சென்று மூன்று வரும் ‛ஆர்ட்ஸ் அண்ட் போட்டோகிராபி' படித்தார்.,இவரது திறமையை அறிந்த முன்னனி அட்வர்டைசிங் நிறுவனத்தின் போட்டோகிராபரான ஜத்தின் கம்பானி தனது நிறுவனத்திற்கு வேலை பார்க்க விக்னேைஷ மும்பைக்கு அழைத்துச் சென்றார்.


latest tamil news


ஜத்தின் கம்பானி,இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான அம்பானியின் குடும்ப புகைப்படக்கலைஞரும் கூட .அம்பானி வீட்டு திருமண நிகழ்வு ஒன்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற போது படம் எடுக்க அழைத்துச் செல்லப்பட்ட போட்டோகிராபர்களில் விக்னேசும் ஒருவர்.அந்த அளவிற்கு படத்தை தரமாகவும் துல்லியமாகவும் எடுக்க வல்லவர்.


latest tamil news


இவரது படங்கள் பெமினா,எலிமெண்ட்ஸ்,ஜிஎம்பிரோ,ஜஸ்ட் அர்பன்,ஹாரிஸ்னட் போன்ற இதழ்களில் பிரசுரமாகியுள்ளது.இவரது படங்கள் மும்பை உள்ளீட்ட பல முக்கிய இடங்களில் நடைபெற்ற கண்காட்சி கூடங்களில் இடம் பெற்றுள்ளது நிறைய விருதுகளும் வாங்கியுள்ளார்.


latest tamil news


இப்போது மும்பையில் ப்ரீலான்சிங் போட்டோகிராபராக செயல்படும் விக்னேஷ் சென்னையிலும் சொந்த ஸ்டூடியோ வைத்துள்ளார் இங்கு அமெரிக்காவின் பல பிராண்டுகளுக்கு படம் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்


latest tamil news


சென்னைக்கும் மும்பைக்குமாக பறந்து கொண்டு இருக்கும் எம்.கே.விக்னேசை தொடர்பு கொள்ளவதற்கான எண்:91678 45609,97910 44225.மெயில் ஐடி team.vigneshmk@gmail.com


latest tamil news


-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X