அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுற்றுலாத்துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (98)
Share
Advertisement
சென்னை: ‛‛கொரோனா தொற்று முழுவதும் முடிவுக்கு வந்தபின், சுற்றுலாத்துறையுடன் இணைந்து ‛பக்தி சுற்றுலா திட்டம்' செயல்படுத்தப்படும்,'' என, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பரத்வாஜேஸ்வரர் திருக்கோவிலில், கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் உலோகத் திருமேனி பாதுகாப்பு அறையை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
சுற்றுலா துறை, பக்தி சுற்றுலா, அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ‛‛கொரோனா தொற்று முழுவதும் முடிவுக்கு வந்தபின், சுற்றுலாத்துறையுடன் இணைந்து ‛பக்தி சுற்றுலா திட்டம்' செயல்படுத்தப்படும்,'' என, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பரத்வாஜேஸ்வரர் திருக்கோவிலில், கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் உலோகத் திருமேனி பாதுகாப்பு அறையை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில், உலோகத் திருமேனிகளை பாதுகாக்க 3,085 அறைகள் விரைவில் கட்டப்படும். கோவிலைச் சுற்றி உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.


latest tamil news


அதேபோல பராமரிப்பில்லாத திருக்கோவில்களைக் கண்டறிந்து அதை மேம்படுத்தும் பணியை மாநில அரசு மேற்கொள்ள உள்ளது. கொரோனா தொற்று முழுவதும் முடிவுக்கு வந்தபின், சுற்றுலாத்துறையுடன் இணைந்து ‛பக்தி சுற்றுலா திட்டம்' செயல்படுத்தப்படும். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராசர் கோயிலில் பக்தர்களிடம் தீட்சிதர்கள் கடுமையாக நடந்துகொள்வது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் மன உளைச்சலின்றி இறை தரிசனம் செய்ய தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்கும். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மீது கைவைப்பேன் என்று நான் சொல்லவில்லை. பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து அண்ணாமலை அப்படி சொல்லியிருக்கிறார். நான் தொகுதி அரசியல் செய்வதில்லை. கடத்தப்பட்ட சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்க மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதிப்பது தொடர்பாக முதல்வருடன் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இந்த திட்டத்தின் வெற்றியே இதில் பணிபுரிய போகும் கைடுகளின் சிறப்பான சேவையை பொறுத்ததே சில மொழிகளாவது அறிந்திருத்தல் இடங்களை பற்றிய அறிய தகவல்கள் விளக்கமாக எடுத்துரைத்தல் எல்லாவற்றுக்கும் மேலாக கனிவு கண்ணியம் ஒழுக்கம் காலந்தவராமை PARAMOUNT
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
25-அக்-202118:50:41 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN அமைச்சர் சேகர் பாபு முதலில் கோவில்களில் மொத்தம் எவ்வளவு தங்கம் உள்ளது அதன்மூலம் எவ்வளவு வட்டி வருகின்றது, அதை எப்படி எதற்காக செலவு செய்தீர்கள் என்பதை ஹிந்துக்களிடம் கூறவேண்டும். ஹிந்துகள் விழித்துக் கொண்டு விட்டார்கள் இனியும் கவர்ச்சியாக பொய் பேசி ஹிந்துக்களை ஏமாற்ற முடியாது. வாழ்க ஹிந்து ஒற்றுமை.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
25-அக்-202120:48:44 IST Report Abuse
Visu Iyerஇவர் என்னங்க மங்கி பாத் என்ற நிகழ்ச்சியிலா பேசுகிறார்.. மக்களை ஏமாற்ற...
Rate this:
அத்வைத் ராமன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
25-அக்-202121:41:53 IST Report Abuse
 அத்வைத் ராமன் இவளவு கேட்கிறியே மேதாவி இந்த மூளை எல்லாம் உனக்கு 10 வருடமா ஏன் வரலை , DMK போட்ட பொட்டில் உனக்கு மூளை சலவை ஆகி கேள்வு கேட்க தோன்றி விட்டதோ...
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
25-அக்-202121:46:59 IST Report Abuse
Dhurveshஏன் உதவாதா IPS ஒருத்தன் இருக்கானே அவனை வெச்சி கண்டுபுடிக்க சொல்லவேண்டியது தானே அவன் தான் ஏற்கனவே ஹெராயின் கடத்தல் விஷயத்தில் மாட்டிவிட போகிறோம் என்று சொல்லி ஓடி வந்தவன் தான் இந்த அண்ணாமலை அப்புறம் என்ன / ஓடிவந்தவனுக்கு ஒன்பதில் குரு...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
26-அக்-202112:07:21 IST Report Abuse
Visu Iyerகுரு நின்ற இடம் பாழா போகும்... இது தான் சோதிட விதி.. ஒன்பதாம் இடம் தர்ம ஸ்தானம்... மற்றதை சொல்லாமலே புரியுமே.....
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
25-அக்-202118:35:46 IST Report Abuse
Narayanan மோடிஜி கோவிலை அடைத்ததாகவும் திமுக திறந்ததாகவும் தவறான கருத்தை பதிவு செய்கிறார் . . திமுக மூடிய கோவிலை திறந்தது பிஜேபி . மறக்கவேண்டாம் அன்பர்களே .
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
25-அக்-202120:50:07 IST Report Abuse
Visu Iyerதிருமறைக்காட்டில் அப்பர் திறந்த கோவில் கதவுகளை சம்பந்தர் அடைக்க பாடினார் என்பது பெரிய புராண செய்தி.. முதலில் இந்து சமய சாத்திரங்கள் இலக்கியங்களை படியுங்கள் நாராயணன்... பெயர் அப்படி இருப்பதால் இப்படி படிக்க கூடாது என்று கட்டாயம் இல்லை தானே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X