பொது செய்தி

இந்தியா

ரஜினிக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது :தனுஷ், விஜய் சேதுபதிக்கும் கவுரவம்

Updated : அக் 26, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (71+ 30)
Share
Advertisement
புதுடில்லி :டில்லியில் நேற்று நடந்த 67 வது தேசிய திரைப்பட விருது விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருதை வழங்கி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவுரவித்தார். ''இந்த விருதை என் குருவும், வழிகாட்டியுமான பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்,'' என, ரஜினி கூறினார். தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருக்கும் சிறந்த நடிகர்களுக்கான விருதுகள்
National Film Awards, Rajinikanth, Dadasaheb Phalke Award, Vigyan Bhawan, National Awards, Vice President, Venkaiah Naidu, Union Minister, Anurag Singh Thakur, L Murugan, Dhanush, Asuran, Vetrimaran, Kalaippuli S Thanu, Vijay Sethupathi, Super Deluxe,  OS7, Parthiban, KDKaruppu, Viswasam, D Imman, தேசிய விருதுகள், தேசிய திரைப்பட விருதுகள், ரஜினிகாந்த், ரஜினி, தாதா சாகேப் பால்கே, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர், அனுராக் தாக்கூர், எல் முருகன், அசுரன், தனுஷ், வெற்றிமாறன், கலைப்புலி எஸ் தாணு, ஒத்த செருப்பு, பார்த்திபன், சூப்பர் டீலக்ஸ், கே டி கருப்பு, விஸ்வாசம், இமான்

புதுடில்லி :டில்லியில் நேற்று நடந்த 67 வது தேசிய திரைப்பட விருது விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருதை வழங்கி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவுரவித்தார். ''இந்த விருதை என் குருவும், வழிகாட்டியுமான பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்,'' என, ரஜினி கூறினார். தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருக்கும் சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.


latest tamil news


ஆண்டுதோறும் சிறந்த நடிகர், நடிகை, பிராந்திய திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டிற்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் மார்ச்சில் அறிவிக்கப்பட்டன. அப்போது, தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் நினைவாக, ஆண்டுதோறும், தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.


latest tamil news


Advertisement


இந்திய திரைத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சிறந்த பங்களிப்பு நல்கிய நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.சிவாஜி கணேசன், இயக்குனர் பாலச்சந்தர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் இந்த விருதை பெற்றுள்ளனர்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடக்காமல் இருந்த அந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா, நேற்று டில்லியில் நடந்தது.இதில், நடிகர் ரஜினிகாந்துக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தார். அவருக்கு சால்வை அணிவித்து, அதற்கான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.


latest tamil news
அப்போது, தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், இணை அமைச்சர் முருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.இதையடுத்து ரஜினிகாந்த் பேசியதாவது: தாதா சாகேப் பால்கே விருதை பெற்றதற்கு மிகுந்த மகிழ்ச்சி. இதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை, என் குருவும், வழிகாட்டியுமான பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன். எனக்கு தந்தையாக இருக்கும், என் சகோதரர் சத்யநாராயண ராவுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவிக்கிறேன். என்னுடன் பணியாற்றிய பஸ் டிரைவரான ராஜ் பகதுார், என்னிடம் இருந்த திறமையை கண்டறிந்து, சினிமாவில் நுழைய என்னை ஊக்குவித்தார்; அவருக்கும் என் நன்றி.என் திரைப்படங்களின் அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், ஊடகங்கள், என் ரசிகர்கள் மற்றும் தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsவிழாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது, அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு வழங்கப்பட்டது. போன்ஸ்லே படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயிக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.சிறந்த நடிகைக்கான தேசிய விருது, மணிகர்ணிகா மற்றும் பங்கா படத்தில் நடித்த கங்கனா ரணாவத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது, அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு வழங்கப்பட்டது.சிறந்த துணை நடிகருக்கான விருதை சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதியும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினை கே.டி., என்கிற கருப்பு துரை படத்தில் நடித்த நாக விஷாலும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை விஸ்வாசம் படத்திற்காக இமானும் பெற்றனர்சிறப்பு ஜூரி விருது, ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.


latest tamil newsரஜினிக்கு வாழ்த்து


latest tamil news
விருது வாங்கிய பின், ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து ரஜினியை தொலைபேசியில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்தார்.நடிகர் ரஜினிகாந்துக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தமிழக முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (71+ 30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-அக்-202108:01:09 IST Report Abuse
ravi chandran நம்பர் ஒன் டுபாக்கூருக்கு விருது வெளங்கிடும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-அக்-202106:03:01 IST Report Abuse
Mani . V அந்த வாடகை பாக்கி இன்னும் வரவில்லை.
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
26-அக்-202106:02:31 IST Report Abuse
மணி புகை குடி கும்மாளம் ரவுடியிசம் என்று திரைப்படங்களில் தோன்றி தமிழ் முதல் தலைமுறை இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்ற நடிகருக்கும் சாதிவெறிப்படமெடுத்து அடுத்த தலைமுறை இளைஞர்களிடையே சாதிமோதலை தூண்ட முயற்சித்த அவரது மருமகனுக்கும் விருது வேறு கிடைத்திருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X