தைவானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தைபெய்: தைவானில் ரிக்டர் அளவில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.இதுகுறித்து அந்நாட்டு வானிலை மையம் தரப்பில் தெரிவித்ததாவது: தைவானின் கிழக்குப் பகுதியில் நேற்றிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 67 கிலோ மீட்டர் ஆகும். இந்த நில நடுக்கம் காரணமாக
தைவான், நிலநடுக்கம், ரிக்டரில் 6.5 ஆக பதிவு, கட்டங்கள் அதிர்ந்தது,

தைபெய்: தைவானில் ரிக்டர் அளவில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்து அந்நாட்டு வானிலை மையம் தரப்பில் தெரிவித்ததாவது: தைவானின் கிழக்குப் பகுதியில் நேற்றிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 67 கிலோ மீட்டர் ஆகும். இந்த நில நடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


நில நடுக்கம் குறித்து தைவான் மக்கள் கூறியதாவது: வீட்டின் இரு சுவர்களும் குலுங்கின. நாங்கள் கடுமையான அதிர்வை உணர்ந்தோம். நாங்கள் மரணத்துக்காக பயந்தோம். எங்களுக்கு இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. எங்கிருக்கிறோம் என்று கூட தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தைவானில் தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பல்வேறு கட்டடங்கள் சரிந்தன. மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழப்புகள் ஏற்பட்டதா? ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தைவானில் கடந்த 1999ம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2,400 பேர் பலியாகினர். அடுத்து 2018ம் ஆண்டு 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
25-அக்-202118:42:01 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN தைவான் தேச மக்களுக்கு பாரதம் என்றும் துணை நிற்கும். தைவான் மக்கள் சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை வேண்டுகிறேன். வாழ்க பாரத தைவான் ஒற்றுமை.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-அக்-202113:14:08 IST Report Abuse
Ramesh Sargam தைவானில் ஏட்பட்டது உண்மையான, இயற்கையான நிலநடுக்கம்தானா, அல்லது திருட்டு சீனா இரவில் வந்து பாம் ஏதாவது போட்டுவிட்டு போய்விட்டார்களா என்று கண்டுபிடிக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X