அரசியல் செய்தி

தமிழ்நாடு

100 ஆண்டு ஆனாலும் தே.மு.தி.க.,வை அழிக்க முடியாது: விஜயகாந்த் நம்பிக்கை

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: ‛‛நூறு ஆண்டுகள் ஆனாலும் தேமுதிக.,வை யாராலும் அழிக்க முடியாது,'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்து, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே உயர்ந்த நோக்கத்தோடும், லட்சியத்தோடும் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தே.மு.தி.க.,
DMDK, Vijayakanth, தேமுதிக, விஜயகாந்த், அழிக்க முடியாது, அறிக்கை

சென்னை: ‛‛நூறு ஆண்டுகள் ஆனாலும் தேமுதிக.,வை யாராலும் அழிக்க முடியாது,'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்து, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே உயர்ந்த நோக்கத்தோடும், லட்சியத்தோடும் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தே.மு.தி.க., என்பது அனைவருக்கும் தெரியும். அனைவரும் கஷ்டப்பட்டு வளர்த்த நமது கட்சியை, இன்றைக்கு யாரோ ஒருசிலர் மூளைச்சலவை செய்பவர்களின் பேச்சை நம்பியும், ஆசை வார்த்தைகளை கூறி மோசம் செய்யும் கயவர்களை நம்பியும் கட்சியை விட்டு நீங்கள் செல்வது எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கட்சிக்கும் செய்யும் துரோகமாக கருதுகிறேன்.

மாற்று அணியினர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி அவர்களுடன் செல்லும் போது, அது அவர்களை பலவீனமானவர்களாக இருப்பதை காட்டுவதாகவும், இதை எண்ணும் போது ‛இக்கறைக்கு அக்கறை பச்சை' என்பதை உணரும் நாள் வரும். எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதற்காக தே.மு.தி.க.,வுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். 100 ஆண்டுகள் ஆனாலும் தே.மு.தி.க.,வை யாராலும் அழிக்க முடியாது. நமது கட்சி நிச்சயம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும்.


latest tamil news


வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். கட்சியின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். மூளைச்சலவை செய்பவர்கள், ஆசை வார்த்தை பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கண்டிப்பதோடு, அடையாளம் கண்டு, கட்சி தலைமைக்கு தெரிவியுங்கள். இனிவரும் காலங்களில் வளர்ச்சி பாதையை நோக்கி நமது கட்சியை வலிமை மிக்கதாக நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து கொண்டு செல்வோம். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
25-அக்-202121:44:42 IST Report Abuse
BASKAR TETCHANA நீங்கள் மட்டும் கொஞ்சம் நன்றாக இருந்துஇருந்தால் கட்சி இப்பவே ஆட்சியை பிடித்து இருக்கும். பழம் நழுவி பாலில் விழும் நேரத்தில் மச்சான் மனை மகன் இம்மூவரும் சேர்ந்து உங்களை படுக்க வைத்து விட்டனர். இவர்கள் கோடி கோடியாய் பணம் சம்பாதித்து விட்டனர். விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
25-அக்-202114:51:05 IST Report Abuse
Anand இந்த அறிக்கை, மேற்படி உங்கள் மனைவி, மகன், மைத்துனருக்கு தெரிந்து தான் வெளியிட்டீர்களா? ஏன்னா, அம்மூவரும் தான் உங்கள் கட்சியை குழிதோண்டி புதைப்பதற்கு கடப்பாரை, மம்முட்டி கொண்டு தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்....
Rate this:
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
25-அக்-202114:28:56 IST Report Abuse
சொல்லின் செல்வன் நீங்கள் கட்சியை வழிநடத்தினால் கட்சி நீண்டகாலம் நிலைக்க வாய்ப்புள்ளது. அண்ணியார் கையில் இப்போது இருக்கும் கட்சி இன்னும் பத்து வருடங்கள் தாக்குப்பிடித்தால் வியப்பே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X