பொது செய்தி

தமிழ்நாடு

துவங்கியது வடகிழக்கு பருவமழை: 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛வடகிழக்கு பருவுமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று துவங்கியதால், திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.இன்று அக்., 25ம் தேதி: திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவாரூர் மாவட்டங்களில்
துவங்கியது, வடகிழக்கு, பருவமழை, 8 மாவட்டங்கள், கனமழை, வானிலை ஆய்வு மையம், எச்சரிக்கை

சென்னை: ‛‛வடகிழக்கு பருவுமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று துவங்கியதால், திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.


latest tamil news



இன்று அக்., 25ம் தேதி: திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்ள மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 26ம் தேதி: திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news



தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 2மோ் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

இதன் காரணமாக வரும் 27 ம் தேதி: திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news




சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:



புலிப்பட்டி (மதுரை) 11 செ.மீ., விராலிமலை (புதுக்கோட்டை) 10 செ.மீ., குடுமியான்மலை (புதுக்கோட்டை) 9 செ.மீ., கடம்பூர் (துாத்துக்குடி), அவிநாசி (திருப்பூர்) தலா 8 செ.மீ., இடையப்பட்டி (மதுரை) 7 செ.மீ., திருப்பூர், சோலையார் (கோவை) தலா 6 செ.மீ., அன்னவாசல் (புதுக்கோட்டை), திருவாரூர், நீடாமங்கலம் (திருவாரூர்), பொன்னமராவதி, கீரனுார் (புதுக்கோட்டை), சித்தம்பட்டி, பேரையூர் (மதுரை), கிருஷ்ணராயபுரம் (கரூர்), அம்முண்டி (வேலுார்), நத்தம் (திண்டுக்கல்), நாமக்கல் தலா 5 செ.மீ.,


latest tamil news




மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வரும் 27 மற்றும் 28ம் தேதி: தெற்கு வங்கக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X