கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீதிபதியின் கருத்து புண்படுத்தி விட்டதாம்: நடிகர் விஜய் மனு

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (84)
Share
Advertisement
சென்னை : கொகுசு கார் இறக்குமதிக்கான வரிவிலக்கு தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் கருத்து தன் மனதை புண்படுத்தி விட்டதாக நடிகர் விஜய் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து புதிதாக 'ரோல்ஸ் ராய்ஸ்' சொகுசு காரை இறக்குமதி செய்தார். வாகன பதிவுக்காக, மண்டல போக்குவரத்து அதிகாரியை அணுகினார். நுழைவு வரி தொடர்பாக,
Vijay, Rollsroycecarcase, Actorvijay, Chennaihighcourt,

சென்னை : கொகுசு கார் இறக்குமதிக்கான வரிவிலக்கு தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் கருத்து தன் மனதை புண்படுத்தி விட்டதாக நடிகர் விஜய் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து புதிதாக 'ரோல்ஸ் ராய்ஸ்' சொகுசு காரை இறக்குமதி செய்தார். வாகன பதிவுக்காக, மண்டல போக்குவரத்து அதிகாரியை அணுகினார். நுழைவு வரி தொடர்பாக, ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கும்படி, போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார். இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்தும் பட்சத்தில், சான்றிதழ் வழங்குவதாக உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நுழைவுவரியில் இருந்து விலக்கு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‛‛நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது. சாதாரண மக்கள் வரி கட்டும் நடிகர்கள் வரி விலக்கு கேட்பது ஏன். நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு என கடுமையாக விமர்சித்து இருந்தார். அதோடு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


latest tamil news



நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மேல் முறையீடு செய்தார். அதில் தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்ட விமர்சனங்களையும், அபராதத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, ‛‛சூர்யா, தனுஷ் உள்ளிட்டோரும் இதுபோன்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக இந்த வழக்கை தொடரவில்லை, வரிவிலக்கு கோருவது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதாலேயே வழக்கு தொடர்ந்தோம். வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை. நிலுவை வரித்தொகையான ரூ.32.30 லட்சம் ஆக.,7ல் செலுத்தப்பட்டு விட்டது. வழக்கு விவரங்களில் தொழிலை பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. இந்த வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை புண்படுத்தி உள்ளன. கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்கிய நிலையில் நீதியின் விமர்சனம் தேவையற்றது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
26-அக்-202112:48:04 IST Report Abuse
Sankare Eswar போடா புண்ணாக்கு
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-அக்-202104:45:56 IST Report Abuse
meenakshisundaram ரெடியாகி விட்டார் விஜய் அடுத்து வரும் படங்களில் நீதி துறை மேல விமர்சனம் செய்யும் வசனம் வரலாம் என்னவோ போடா மாதவா வர வர நீ ரோம்ப கெட்டிக்காரனாயிட்டே
Rate this:
Cancel
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
26-அக்-202101:59:01 IST Report Abuse
thonipuramVijay கஷ்டப்பட்டு உழைத்து பல கோடி கார் கம்பெனிக்கு கொடுத்து சொகுசாக இருக்க கார் வாங்கும்போது இல்லாத வலி , ஏன் சில லட்சங்கள் அதற்க்கு வரி கட்டும்போது வலிக்கிறது ? வரி விலக்கு கேட்ப்பது அரசிடம் மனிதாபிமான முறையில் கேட்கும் பிட்சை, நீ சொகுசு பொருள் வாங்கும் போதே வரிக்கும் சேர்த்து உன் பணத்தை வெளியே எடுத்திருக்க வேண்டும்... சாமான்ய மனிதனே அனைத்திற்கும் வரி கட்டி வாங்கும்போது ...உன்னை போன்ற கோடிகளில் புரள்புவனுக்கு வரி கட்ட என்ன வலி ? அப்போ செயல் சராசரி மனிதனுக்கும் கீழ் அனால் சினிமாவில் மட்டும் சூப்பர் ஹீரோ ??? வரிக்கட்ட முடியவில்லை என்றால் ...எதற்கு அந்த கார் உனக்கு .... ? உன்னால் அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் கம்பெனிக்கு கேட்ட பெயர். மிக மிக உயர்ந்த ராயல் மனிதருக்கான காரை வாங்கிவிட்டு வரி காட்டாமல் அதற்க்கு விளக்கு கேட்டு பல ஆண்டுகளாக வழக்கு ....வெட்கமேயில்லை ....நீதிபதி சொன்னது ரொம்ப கம்மி .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X