பெட்ரோல், டீசல் விலை உயர்வு 15 நாள் காங்., போராட்டம்

Added : அக் 25, 2021
Advertisement
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.காங்., கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தலைநகர் டில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 107.59; டீசல் 96.32 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பல நகரங்களில் டீசல் விலை 100 ரூபாயை


புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.


காங்., கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தலைநகர் டில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 107.59; டீசல் 96.32 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பல நகரங்களில் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது.இந்த விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுதும் காங்கிரஸ் சார்பில் நவ., 14 முதல், தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் சாடல்:
காங்., - எம்.பி., ராகுல் நேற்று கூறுகையில், “வரி என்ற பெயரில் மத்திய அரசு மோசடி செய்து வருகிறது. தேர்தல் நடக்கும்போது மட்டும் எரிபொருள்களின் விலைகளில் சிறிது குறையும்,” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X