பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 7 ஆண்டுகளில் 157 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு: சுகாதாரத்துறை பெருமிதம்!

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛இந்தியா முழுவதும் கடந்த 2014ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்ட 157 புதிய மருத்துவ கல்லூரிகளுக்காக ரூ.17 ஆயிரத்து, 691 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது,'' என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பெருமிதம் தெரிவித்துள்ளதாவது.இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்ததாவது: கடந்த 2014ம் ஆண்டு முதல், 157 புதிய
இந்தியா, 7 ஆண்டுகள், புதிய மருத்துவக் கல்லூரிகள், சுகாதாரத்துறை, பெருமிதம்

புதுடில்லி: ‛‛இந்தியா முழுவதும் கடந்த 2014ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்ட 157 புதிய மருத்துவ கல்லூரிகளுக்காக ரூ.17 ஆயிரத்து, 691 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது,'' என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பெருமிதம் தெரிவித்துள்ளதாவது.


latest tamil news


இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்ததாவது: கடந்த 2014ம் ஆண்டு முதல், 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதுடன், இந்த திட்டங்களில் ரூ.17,691.08 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்தத் திட்டங்கள் நிறைவடையும்போது, இளநிலை மருத்துவப்படிப்பில் 16,000 இடங்கள் சேர்க்கப்படும். இதில் 64 புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளதால், 6,500 இடங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள மாநில அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ரூ.2,451 கோடி வழங்கியுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள், தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளைத் தொடங்க மாநில, மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.


latest tamil news


நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கும் நோக்கில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. 15 மாநிலங்களில் உள்ள 48 மருத்துவக் கல்லூரிகளில் 3325 மருத்துவ இடங்களை அதிகரிக்க மத்திய அரசு தனது பங்காக ரூ.6,719 கோடியை விடுவித்துள்ளது. இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
25-அக்-202118:36:57 IST Report Abuse
abdulrahim மதுரைக்கு வந்துட்டட்ட்டேடே டேஏஏஏஏ இருக்குற எய்ம்ஸ் போலத்தான் இவை எல்லாமே ,வரும் ஆனா வராது.....
Rate this:
Cancel
ராஜா, பெங்களூர் இதென்ன! தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் 12 தனியார் குடும்ப மருத்து கல்லூரிகள், 5 மது ஆலைகள்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-அக்-202116:05:35 IST Report Abuse
raja இந்த வேகத்துல பூனா மோதல் போட்டு மருத்துவ கல்லூரி ஆரமித்து கொள்ளை அடித்த எங்க திராவிட கல்வி வள்ளல்கள் கதி என்னாவது? முடியாது முடியாது சமூக நீதிக்கு பங்கம் விளைவிக்கும் இந்த திட்டத்தை செயல் படுத்த விட மாட்டோம்.என் உடன்பிறப்பு போர் படைகலே பொங்கி எழு... போர் தொடு ..சனாதனத்தை வேர் அறுப்போம்முன்னு கூவுவார்கல் பாருங்க நம்ப விடியலு, குருமா சைக்கோ ஓசி சோறு எல்லாரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X