தொண்டாமுத்தூர் : ''குறுகிய காலத்தில், மிக வேகமாக, இந்தியாவில், 100 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ள பிரதமருக்கு நன்றி,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
நாட்டில் 100 கோடி தடுப்பூசி செலுத்தியதை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடிக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி, ஈஷா ஆதியோகி முன் நேற்று நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், 250க்கும் மேற்பட்டவர்கள், '100' என்ற எண் வடிவில் நின்று, மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு, நன்றி தெரிவித்தனர்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ''100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்பது, பிரதமர் மோடியின் கனவு. குறுகிய காலத்தில், மிக வேகமாக இதை செய்து காட்டியுள்ளார். பிரதமருக்கு நன்றி கூறும் விதமாக, ஆதியோகி முன், 100 என்ற வடிவில் நின்று, நன்றி தெரிவித்தோம்,'' என்றார்.
எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் செல்வகுமார், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE