அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு: பன்னீர்செல்வம்

Added : அக் 25, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
மதுரை: ‛‛சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக செயலாளர்கள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்,'' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற
ADMK, Sasikala, Panneerselvam, OPS, அதிமுக, சசிகலா, பன்னீர்செல்வம், ஓபிஎஸ்

மதுரை: ‛‛சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக செயலாளர்கள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்,'' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே கட்சி செயல்பட்டு வருகிறது. சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக செயலாளர்கள் ஆலோசித்து முடிவெடுப்பர். எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாகவே இன்றளவும் உள்ளது.


latest tamil news


ஜெயலலிதாவின் திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். தற்போது பொறுப்பேற்றுள்ள தி.மு.க., அரசு எந்த திட்டங்களையும் நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அ.தி.மு.க., அரசின் திட்டங்களை நிறுத்தினால் நாங்கள் சட்டபூர்வமாக போராடுவோம். இந்த தி.மு.க., அரசு மிகவும் அவசரப்படுகின்றது. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு எதிர்க்கட்சிகளை அழிக்க வேண்டுமென நினைக்கின்றனர்; அது நடக்காது. அரசியல் நாகரிகத்துடன்தான் பேசவேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
25-அக்-202123:50:58 IST Report Abuse
Aarkay நீங்கள் எந்தப்பக்கம் சாய்கிறீர்கள் என்று அனைவருக்கும் புரிகிறது. விழுந்து வணங்க உங்களுக்கு இரு கால்கள் வேண்டும். எம் ஜி ஆர் அல்லது ஜெயா போன்ற ஆளுமை இல்லாத உங்கள் கட்சி, ஒரு சொர்ணாக்காவிடம் சரணடைய துடிப்பது புரிகிறது. யார் வந்தாலும், உங்கள் கட்சியை கரைசேர்க்க இயலாது. அதிமுக கட்சியும் கான்+க்ராஸ் போல ஒரு பூட்ட கேஸ்
Rate this:
Cancel
25-அக்-202122:36:12 IST Report Abuse
ஸாயிப்ரியா நடந்தது தர்ம யுத்தமா நாடகமா. நல்ல வேளை இன்றூ ஜெ அவர்கள் இல்லை.
Rate this:
Cancel
berlin - manama,பஹ்ரைன்
25-அக்-202122:10:49 IST Report Abuse
berlin இன்னமும் காலம் இருக்கிறது. சீக்கிரம் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு சசிகலாவுடன் இணைந்து ஜெயலலிதா பேரில் ஒரு கட்சி தொடங்கி 2025 இல் ஆட்சியை கைப்பற்றுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X