ரூ.3 கோடி வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ்; ரிக்சா ஓட்டுநர் அதிர்ச்சி

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
மதுரா: உத்தர பிரதேசத்தில் ரிக்சா ஓட்டுநர் ஒருவருக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.உத்தர பிரதேசத்தில் மதுரா அருகில் உள்ள பகல்பூர் பகுதியில் உள்ள அமர் காலனியை சேர்ந்தவர் பிரதாப் சிங். ரிக்சா ஓட்டுனரான இவருக்கு சமீபத்தில் வருமான
Pay Tax, IT Department, Serves Notice, Rickshaw Puller, UP, உபி, உத்தரபிரதேசம், ரிக்ஷா, ரிக்சா, வருமான வரி, நோட்டீஸ், வரி

மதுரா: உத்தர பிரதேசத்தில் ரிக்சா ஓட்டுநர் ஒருவருக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மதுரா அருகில் உள்ள பகல்பூர் பகுதியில் உள்ள அமர் காலனியை சேர்ந்தவர் பிரதாப் சிங். ரிக்சா ஓட்டுனரான இவருக்கு சமீபத்தில் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதில், 3 கோடியே, 47 லட்சத்து, 54 ஆயிரத்து, 896 ரூபாய் வருமான வரி செலுத்துமாறு கோரப்பட்டிருந்தது. பிரதாப் சிங்கிற்கு படிப்பறிவு இல்லாததால், வேறு ஒருவரின் உதவியுடன் நோட்டீசில் இருக்கும் விவரங்களை கேட்டறிந்ததும் அதிர்ந்து போயுள்ளார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.


latest tamil news


அதன்படி, போலீசார் நடத்திய விசாரணையில், பிரதாப் சிங்கின் வங்கியில் இருந்து பான் கார்டு கேட்டதால் கடந்த மார்ச் மாதம் புதிய பான் கார்டுக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். அடுத்த சில நாட்களில் அவரது முகவரிக்கு பான் கார்டு நகல் வந்துள்ளது. தனக்கு படிப்பறிவு இல்லாததால், அது நகல் என்று தெரியாமல் இவ்வளவு நாட்களாக இருந்துள்ளார். அவரின் உண்மையான பான் கார்டை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ஜி.எஸ்.டி., எண் பெற்றதுடன், கடந்த 2018-19ல் ரூ.43.44 கோடி அளவிற்கு வணிகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசுக்கு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
26-அக்-202105:50:23 IST Report Abuse
rajan ஏழை ரிக்ஷகாரருக்கு மூன்று கோடி வருமானவரி கட்டளையிட்டது ஏழை தாயின் மஹான் என்று சொல்லிக்கொள்ளும் மோடியின் சாதனை மக்களை துன்புறுத்துவதில் மோடியின் சாதனை அம்பானி அடானிக்கு வரி சலுகை ஏழைக்கு வரி கொலைவெறி பிடித்த பிஜேபி
Rate this:
Cancel
Thiyaga Rajan - Chennai,இந்தியா
25-அக்-202121:52:17 IST Report Abuse
Thiyaga Rajan ஒரு பான் கார்டு கொண்டு கொள்ளை அடிக்கிற அளவுக்கு ஓட்டைகள் கொண்ட சிஸ்டம் தான் இன்னும் உள்ளதா??? வரி வசூல் பண்றதுல உள்ள அக்கறை இங்க இது போன்ற ஓட்டைகளையும் அடைக்கணும் ...... இதுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை .... ஆனா நிர்வாகம் பண்ற அதிகாரி என்ன கிழிக்கிறார் ?//////
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
25-அக்-202120:31:20 IST Report Abuse
Indhuindian Ask INFO
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X