நைஜீரிய சிறையில் இருந்து தப்பியோடிய 262 கைதிகள் மீண்டும் சிறையிலடைப்பு| Dinamalar

நைஜீரிய சிறையில் இருந்து தப்பியோடிய 262 கைதிகள் மீண்டும் சிறையிலடைப்பு

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (1)
Share
அபுஜா: நைஜீரியா சிறைக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்மக்கும்பல் சிறைக்காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி கைதிகளை மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தப்பியோடிய 262 கைதிகளை பாதுகாப்பு படையினர் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு
நைஜீரியா, சிறை, தப்பியோட்டம், 262 கைதிகள், மீண்டும் சிறையிலடைப்பு,

அபுஜா: நைஜீரியா சிறைக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்மக்கும்பல் சிறைக்காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி கைதிகளை மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தப்பியோடிய 262 கைதிகளை பாதுகாப்பு படையினர் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. அந்நாட்டின் ஒயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாத செயல்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைதான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


ஒயோ மாகாணத்தில் உள்ள சிறைக்குள் நேற்று துப்பாக்கி, வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்மக்கும்பல் சிறைக்காவலர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும், சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 800க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்தனர். கைதிகள் அனைவரும் சிறையில் இருந்து தப்பியோடினர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், தப்பியோடிய கைதிகளில் 262 பேரை பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய 575 கைதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X