ஓட்டுகளுக்காக வேலை செய்த அரசுகள்: பிரதமர் மோடி தாக்கு

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
லக்னோ: ஏழு ஆண்டுகளுக்கு முன் இருந்த மத்திய அரசும், 4 ஆண்டுகளுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் இருந்த அரசும் ஓட்டுகளுக்காக வேலை செய்ததாக எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி விமர்சித்து பேசியுள்ளார்.உத்தர பிரதேசத்தில் இன்று (அக்.,25) ஒன்பது மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ஏராளமான கர்ம யோகிகளின் பல ஆண்டுகள் கடின
PMModi, UP, Congress, WheelofCorruption, பிரதமர், மோடி, ஓட்டுகள், அரசு, காங்கிரஸ்

லக்னோ: ஏழு ஆண்டுகளுக்கு முன் இருந்த மத்திய அரசும், 4 ஆண்டுகளுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் இருந்த அரசும் ஓட்டுகளுக்காக வேலை செய்ததாக எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி விமர்சித்து பேசியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் இன்று (அக்.,25) ஒன்பது மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ஏராளமான கர்ம யோகிகளின் பல ஆண்டுகள் கடின உழைப்பின் விளைவுதான் மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும். 9 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பதை அடுத்து சுமார் 2,500 புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்குப் புதிதாக வேளைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மருத்துவக் கல்வியின் புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது.


latest tamil news


உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், எம்.பி.,யாக இருந்தபோது உ.பி.,யில் மோசமான மருத்துவ முறையின் சிரமங்களை பார்லி.,யில் விவரித்தார். உத்தரப் பிரதேச மக்களால், சேவை செய்ய வாய்ப்பளிக்கப்பட்ட யோகி, மூளைக்காய்ச்சல் நோய் பரவலைத் தடுத்து நிறுத்தி இந்தப் பகுதியின் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றியவர். 7 ஆண்டுகளுக்கு முன் இருந்த மத்திய அரசும், 4 ஆண்டுகளுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் இருந்த அரசும் ஓட்டுகளுக்காக வேலை செய்தன.


latest tamil news


கடந்த 2014-க்கு முன் நமது நாட்டில் 90 ஆயிரத்துக்கும் குறைவான மருத்துவ இடங்களே இருந்தன. கடந்த 7 ஆண்டுகளில் 60 ஆயிரம் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டன. உத்தரப் பிரதேசத்திலும் கூட 2017 வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,900 மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில் இந்த அரசால் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
26-அக்-202117:44:16 IST Report Abuse
PKN கல்யாண் சிங்குன்னு ஒருத்தர் கிட்டதட்ட 10 வருடத்திற்கு மேல் ஆட்சியில் இருந்தார் எவ்வளவு ஆணி பிடிக்கிறார். அடுத்து வாஜ்பாய் பிரதமராக இருந்தார் அவரும் ஓட்டுக்கு வேலை செய்தாரா? கார்பரேட்க்கு வேலை செய்பவர்களுக்கு மக்களுக்காகவே வேலை செய்பவர்கள் வாஜ்பாய் உட்பட ஓட்டுக்கு வேலை செய்த மாதிரிதான் தெரியும்.
Rate this:
Cancel
25-அக்-202123:05:48 IST Report Abuse
சம்பத் குமார் 1). கர்ம யோகி பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். கால பைரவர்.2). தான் விடும் மூச்சு வலது நாசியில் India என்றும் இடது நாசியில் பாரத் மாதா ஜெய் என்றும் வாழ்பவர்.3). அவருடைய சாதனைகளை அடியேன் இந்த வாரம் கட்டுரையாக வெளியிட கடமை பட்டு உள்ளேன்.4). மோடியை தினசரி முப்பது கோடி இந்திய மக்கள் ஐந்து ஆறு முறை நினைக்கிறார்கள்.5). பகவத் கீதையில் கண்ணன் சொன்ன மாதிரி பரந்தாமா எவர் ஒருவர் என்னை நிந்துகிறார்களோ அவர்களிடம் நான் வாசிப்பேன். 6). இந்திய மக்கள் தோகையில் 140 கோடியில் 30 கோடி மக்கள் திரு மோடியை நினைப்பதால் அவர் சத்தியம் பெறுகிறார். தர்மே உலகில் நிலையானது. தர்மம் சத்யம் நேர்மை அவரிடம் வைத்து இருக்கும். நன்றி ஐயா
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
25-அக்-202121:55:19 IST Report Abuse
T.sthivinayagam வேட்டுக்காக வேட்டி கட்டியது யாரு அரோகரா சொன்னது யாரு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X