பணவீக்கத்தை இருமடங்காக்கிய மோடி அரசு: அகிலேஷ் விமர்சனம்

Added : அக் 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முக்கிய கட்சிகள் ஈடுபடத் துவங்கிவிட்டன. முன்னதாக ரத யாத்திரையை துவக்கி வைத்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தற்போது தேர்தல் நெருங்குவதால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யவிருக்கும் நலத் திட்டங்கள் குறித்தும் மோடி ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கருத்து தெரிவிக்க
UP, Akhilesh Yadav, BJP, Forgotten, Promise, Farmers Income, உபி, உத்தரபிரதேசம், அகிலேஷ் யாதவ், மோடி, பாஜக, பாஜ, பணவீக்கம், இருமடங்கு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முக்கிய கட்சிகள் ஈடுபடத் துவங்கிவிட்டன. முன்னதாக ரத யாத்திரையை துவக்கி வைத்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தற்போது தேர்தல் நெருங்குவதால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யவிருக்கும் நலத் திட்டங்கள் குறித்தும் மோடி ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கருத்து தெரிவிக்க துவங்கிவிட்டார்.

இந்நிலையில், தற்போது பா.ஜ., அரசை விமர்சித்து இருக்கும் அகிலேஷ் யாதவ், விவசாயிகள் வருமானத்தை இருமடங்காகும் என்று முன்னதாக உறுதியளித்த பாஜ., அரசு அதற்கு பதிலாக நாட்டின் பணவீக்கத்தை இரு மடங்காகி விட்டது என்று கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை, பொய்யின் மறு உருவமாக விளங்குவதாக அவர் விமர்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநில விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடும் பொருட்களுக்கு அரசிடமிருந்து உரிய தொகையை பெறுவதில்லை.


latest tamil news


இதன் காரணமாக லக்கிம்பூர் கேரி பகுதியில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஓர் விவசாயி தனது நிலத்தில் விளைந்த நெல்லுக்கு தீ வைத்துள்ளார். இதற்கெல்லாம் சரியான பதில் அளிக்க மோடி அரசு தயாராக இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவும் மழைக்காலங்களிலும் பயிர்கள் அதிகமாக சேதமடைகின்றன. மேலும் பூச்சிகள் தாக்கினாலும் பயிர் சேதம் ஏற்படுகிறது. இதற்கும் பாஜ., அரசிடம் பதில் இல்லை. உத்தரப் பிரதேசம் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் ஊழல் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. அதே சமயத்தில் மத்திய பா.ஜ., அரசு அரசு விமான சேவையை தனியார்மயமாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
25-அக்-202123:42:34 IST Report Abuse
Aarkay பைத்தியங்களுக்கெல்லாம் பதிலளிக்க எங்கள் பிரதமருக்கு நேரமில்லை. என்னதான் முட்டி மோதினாலும், மண்ணை கவ்வப்போவது திண்ணம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-அக்-202122:28:29 IST Report Abuse
Ramesh Sargam மோடி அவர்கள் பணவீக்கம் அறிவித்தபிறகு, 'செமையா அடி வாங்கிய' அரசியல்வாதிகளில், இந்த கோண மூக்கு அகிலேஷ் யாதவ் -வும் ஒருவன்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
25-அக்-202119:26:07 IST Report Abuse
Visu Iyer இதை தான் நாடு வளர்ச்சி... உலக நாடுகள் இந்தியாவை பார்க்கிறது என்று சொல்றாங்களோ... அப்படின்னா... மறுபடியும் பண மதிப்பு இழப்பு வராதுன்னு சொல்லுங்க.. அப்புறம் என்ன அவுங்க கருப்பு பணத்தை அள்ள வேண்டியது தான்
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
26-அக்-202122:59:48 IST Report Abuse
Aarkayஹையா பெயரில் ஒரு ஒட்டகம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X