பொது செய்தி

இந்தியா

ஓரினச் சேர்க்கையாளர்களது திருமணத்தைப் பதிவு செய்ய கோரிக்கை; தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
டில்லி: இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அவர்கள் இணைந்து வாழ இந்து மற்றும் வெளிநாட்டு திருமண சட்டங்களை மாற்ற நீண்டகாலமாக ஓரினச் சேர்க்கையாளர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து டில்லி உயர்நீதிமன்ற மன்றத்தில் ஓரினச்சேர்க்கை தம்பதியர் வழக்கு ஒன்றை தொடுத்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி

டில்லி: இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அவர்கள் இணைந்து வாழ இந்து மற்றும் வெளிநாட்டு திருமண சட்டங்களை மாற்ற நீண்டகாலமாக ஓரினச் சேர்க்கையாளர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.latest tamil news
இதுகுறித்து டில்லி உயர்நீதிமன்ற மன்றத்தில் ஓரினச்சேர்க்கை தம்பதியர் வழக்கு ஒன்றை தொடுத்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.என்.பாட்டில் மற்றும் ஜோதி சிங் விசாரித்தனர். நவம்பர் 30ஆம் தேதிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உச்சநீதிமன்றம் இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் ஒன்றை கொண்டுவந்தது. இதன்படி ஓரினச்சேர்க்கை தம்பதி மனமொத்து உறவு கொள்ள முடிவெடுத்தால் அது குற்றமாகக் கருதப்படாது என்று தெரிவித்திருந்தது. அதே சமயத்தில் கட்டாய ஓரினச்சேர்க்கை குற்றமாகக் கருதப்படும் என்று கூறியிருந்தது.
இதனை ஆதரித்தும் எதிர்த்தும் அபிஜித் ஐயர் மித்ரா மற்றும் மூன்று மனுதாரர்கள் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்திருந்தார். இந்த வழக்கின் முதல் பெட்டிஷனில், உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கை தம்பதிகள் ஒன்றாக வாழ அனுமதி அளித்திருந்தாலும் இதனை உயர்நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பெண் ஓரினச்சேர்க்கை தம்பதி தம்பதியர் ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தாங்கள் இணைந்து வாழ சமூக அந்தஸ்து அளிக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஆண் ஓரினச்சேர்க்கை தம்பதியர் தாக்கல் செய்த மனுவில் வெளிநாட்டு திருமண சட்டத்தின் அடிப்படையில் தங்களது திருமணத்தை இந்தியாவில் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று தங்கள் மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இதேபோல மற்றொரு ஓரினச்சேர்க்கை தம்பதியர் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்து தங்களுக்கு துணையை தேடிக் கொண்டாலும் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய அனுமதிக்க கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மேற்கண்ட இந்த மனுதாரர்கள் கூறும் அனுமதியை எதிர்த்து துஷார் மேத்தா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது
'உச்சநீதிமன்றம் இரண்டு ஓரினச்சேர்க்கையாளர்களின் சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமாகாது என்று மட்டுமே அறிவித்துள்ளது. ஆனால் ஓரினச் சேர்க்கையாளர்கள் பதிவு திருமணம் செய்து கொள்ள இன்னும் அனுமதிக்கவில்லை. எனவே ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்ய டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கக்கூடாது' என்று தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த வழக்கு நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்வதை முன்னதாக மத்திய அரசு எதிர்ப்பு இருந்தது. இந்திய கலாச்சாரத்தை பொறுத்தவரையில் திருமணம் என்பது தம்பதிகளின் சேர்க்கை மட்டும் அல்ல என்றும் அது இரு குடும்பங்களின் சேர்க்கை என்றும் தெரிவித்திருந்தது. இதில் நீதிமன்றம் தலையிட்டால் தனிமனித சட்டங்கள் பாதிப்படையும் என்று கூறியிருந்தது.


latest tamil newsஅதே சமயத்தில் திருமணம் செய்துகொண்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது அவர்களது உறவு முறை குறித்து அந்தந்த நாட்டு அரசுகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதன் காரணமாக அவர்களால் வெளிநாடுகளில் கிடைக்கும் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெற முடியவில்லை. இப்பிரச்னையைத் தீர்க்க ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று பல ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-அக்-202114:48:29 IST Report Abuse
அப்புசாமி வேறு மதத்தவர் இதுமாதிரி ஓரின திருமணம்லாம் செய்ய முடியாது. அடிச்சே கொன்ருவாங்க.
Rate this:
Cancel
26-அக்-202109:23:23 IST Report Abuse
ஆரூர் ரங் சர்ச்சுகளில் நடக்கும் திருமணங்களில் இன்று முதல் நீங்கள் MAN AND WIFE என்பார்கள். இதில் யார் MAN யார் WIFE ? ஆனா ஒண்ணு. சில ஐரோப்பா சர்ச்சுகளில் ஒருவர். தன்னைத் தானே😉😉 மணக்க அனுமதிக்கிறார்களாம் . அடுத்து மிருகங்கள் கல். மண், காற்று ஆகியவற்றைக்கூட மணக்க சட்டம்😇😇 கேட்டாலும் ஆச்சர்யமில்லை .
Rate this:
Cancel
26-அக்-202109:16:57 IST Report Abuse
ஆரூர் ரங் ஜமாஅத் அல்லது சர்ச்சுகளில் இது போன்ற திருமணங்களை நடத்த ஒப்புக் கொள்ளட்டும் பார்ப்போம். ஹிந்து😒 திருமண சட்டத்தில மட்டுமே அரசு மற்றும் கோர்ட் இஷ்டத்திற்கு கை வைப்பது வழக்கமாகிவிட்டது . கோர்ட் இது போன்ற அபத்தமான அவலங்களை ஏற்க க்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X