அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக பா.ஜ.,செயல்படுகிறது: கோவையில் அண்ணாமலை பேச்சு

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
கோவை: கோவை காந்திபுரம் பகுதி பா. ஜ., தலைமை அலுவலகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.நிகழ்ச்சிக்கு பின்னர் அண்ணாமலை கூறியதாவது:அதிமுக உள் விஷயங்களை இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பேசுகின்றனர். சசிகலா குறித்து ( சசிகலா வருகை)நான் கருத்து சொன்னால் அது தவறாக

கோவை: கோவை காந்திபுரம் பகுதி பா. ஜ., தலைமை அலுவலகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.



latest tamil news



நிகழ்ச்சிக்கு பின்னர் அண்ணாமலை கூறியதாவது:அதிமுக உள் விஷயங்களை இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பேசுகின்றனர். சசிகலா குறித்து ( சசிகலா வருகை)நான் கருத்து சொன்னால் அது தவறாக போகும்..யார் வேண்டுமானலும் அரசியலுக்குவரலாம். இந்த விவகாரத்தைஅந்த கட்சிக்குள் பேசிக்கொள்கின்றனர்.


இந்த நேரத்தில் கருத்து சொல்வது சரியல்ல


நமது அம்மா நாளிதழ் பாராட்டி எழுதி இருப்பது குறித்த கேள்விக்கு, யார்,திட்டினாலும், பாராட்டினாலும் ஆதாரங்களோடு திட்டுங்கள், பாராட்டுங்கள் திமுகவை பா.ஜ.வும் விமர்சனம் செய்கின்றது.அஇஅதிமுக விமர்சனம் செய்கின்றது. பழனிசாமி கூட சமீபத்தில் திமுகவை கண்டித்து அறிக்கை கொடுத்தார்.


latest tamil news



ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக பா.ஜ. செயல்படுகிறது. அதிமுகவில் அதிக எம்.எல்.ஏ இருக்கின்றனர். அவர்களும் பேசுகின்றனர்.சில இடங்களில் நாங்கள் சொல்வதை தமிழக முதல்வரும் கேட்டுக்கொள்கிறார். கோவில்கள் திறப்பது , ஆவின் டெண்டர் போன்றவற்றை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார்.தமிழகத்தில் திமுக பேசுவது எல்லாம். பா.ஜ.வை எதிர்த்து தான்.
திமுக பா.ஜ., இடையேதான் கருத்தியல் ரீதியான அரசியல் நடைபெறுகிறது. யார் எதிர்கட்சி என்றுஅதிமுக ,பா.ஜ. இடையே போட்டி இல்லை. ஒன்றாக இருக்கிறோம்.
கூட்டணி கட்சியுடன் சுமூகமான உறவை வைத்திருக்கிறோம்.அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். போகலாம். மக்கள் ஏற்றுக்கொள்வதை பொறுத்து. விடையை மக்களிடமே விட்டுவிடலாம். தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊழல் நடக்க போகின்றது.அதை சுட்டி காட்டிகின்றோம்.
கண்ணாடி மாளிகையில் அமர்ந்து அமைச்சர் கல் எறிகிறார்.அவர் வீட்டை சுத்தம் செய்துவிட்டு கேட்கட்டும். பதில் சொல்கிறேன்அமைச்சர் செந்தில் பாலாஜி வாயில் இருந்தே எல்லா உண்மைகளும் வெளிவரும்.
திமுக, பா.ஜ. இடையே இந்த விஷயத்தில் கருத்து மோதல்கள் நடைபெறவில்லை. கொடுத்த ஆதாரங்களுக்கு பதில் வரவில்லை.ஆதாரம் கொடுக்காமல் யாரும் பேசவில்லை.அவர்கள் சுதாரித்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.முதல்வர் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்.மின்துறை மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahalakshmi - Sivakasi,இந்தியா
26-அக்-202110:09:32 IST Report Abuse
Mahalakshmi நன்றி அண்ணாமலை
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
26-அக்-202106:39:19 IST Report Abuse
amuthan அப்படி என்றால் அதிமுக எதிர் கட்சி இல்லையா. ஆதாரங்களை மக்களுக்கும் கொடுக்கலாம். இவர் ஆதாரம் கொடுத்தது போல தெரியவில்லை. அவரும் வழக்கு போடுவது போல தெரியவில்லை. மக்களை காமடி என்று நினைக்கிறார்கள்
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
26-அக்-202106:39:25 IST Report Abuse
amuthan அப்படி என்றால் அதிமுக எதிர் கட்சி இல்லையா. ஆதாரங்களை மக்களுக்கும் கொடுக்கலாம். இவர் ஆதாரம் கொடுத்தது போல தெரியவில்லை. அவரும் வழக்கு போடுவது போல தெரியவில்லை. மக்களை காமடி என்று நினைக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X