கார்த்தி வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்., - எம்.பி., கார்த்தி, ஒரு கோடி ரூபாய் 'டிபாசிட்' செய்து விட்டு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம், ஐ.என்.எஸ்., மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற உதவியது உள்ளிட்ட வழக்குகள் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன்
 கார்த்தி, வெளிநாடு செல்ல, சுப்ரீம் கோர்ட், அனுமதி

புதுடில்லி : சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்., - எம்.பி., கார்த்தி, ஒரு கோடி ரூபாய் 'டிபாசிட்' செய்து விட்டு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம், ஐ.என்.எஸ்., மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற உதவியது உள்ளிட்ட வழக்குகள் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது உள்ளன. வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார்.


latest tamil news



இந்நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்த மனு இன்று (அக்.25) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, '' ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என, வாதிட்டார்.இதைத் தொடர்ந்து கார்த்தி மீதான புகார்களை தனியே பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கார்த்தி, ஒரு கோடி ரூபாய் 'டிபாசிட்' செய்து விட்டு, அக்., 25 - நவ., 21 வரை வெளிநாடு சென்று வர அனுமதி அளித்தது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-அக்-202106:15:35 IST Report Abuse
Mani . V வெளிநாடு செல்ல மட்டும்தான் தான் அனுமதியா? அல்லது கருப்புப் பணத்தால் தொடங்கப்பட்ட தொழில்களின் நிலவரங்களை (வரவு, செலவு) பார்த்து வரவும் அனுமதியா?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-அக்-202105:55:56 IST Report Abuse
Kasimani Baskaran நூறு கோடி என்றாலாவது பரவாயில்லை... ஒரு கோடி என்பது கேடிகள் டிபன் சாப்பிட செலவு செய்யும் பணம்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
26-அக்-202100:10:03 IST Report Abuse
r ravichandran பேசும் போது இவரும், இவரது தந்தையும் உலக மகா யோக்கியர்கள் போல பேசுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X