பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 25, 2021
Share
Advertisement
அக்., 26, 2013மியான்மரில் உள்ள மாண்டலேயில், 1927 டிச., 9ம் தேதி பிறந்தவர், பின்னப்பாக்கம் சுப்பிரமணி சுந்தரம். சுருக்கமாக, பி.எஸ்.மணிசுந்தரம். இரண்டாம் உலகப் போர் காரணமாக, இந்தியாவிற்கு வந்தார். சென்னை லயோலா கல்லுாரி, கிண்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் மற்றும் கனடாவில் உயர் கல்வியை முடித்தார்.தமிழக பொதுப் பணித் துறையில் பொறியாளராக பணியாற்றினார். காரைக்குடி ஏ.சி. பொறியியல்

இதே நாளில் அன்று


அக்., 26, 2013



மியான்மரில் உள்ள மாண்டலேயில், 1927 டிச., 9ம் தேதி பிறந்தவர், பின்னப்பாக்கம் சுப்பிரமணி சுந்தரம். சுருக்கமாக, பி.எஸ்.மணிசுந்தரம். இரண்டாம் உலகப் போர் காரணமாக, இந்தியாவிற்கு வந்தார். சென்னை லயோலா கல்லுாரி, கிண்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் மற்றும் கனடாவில் உயர் கல்வியை முடித்தார்.தமிழக பொதுப் பணித் துறையில் பொறியாளராக பணியாற்றினார். காரைக்குடி ஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, திருச்சி மண்டல பொறியியல் கல்லுாரி ஆகியவற்றின் முதல் முதல்வர்; திருச்சி பாரதிதாசன் பல்கலையின் முதல் துணைவேந்தர் என்ற பெருமைகளை பெற்றார்.துணைவேந்தர் பொறுப்பில் இருந்த போது, பெல் நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற்று, 'பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்' கல்வி நிறுவனத்தை நிறுவினார். இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வியின் முன்னோடியாக செயல்பட்டார்.சென்னையில், 2013 அக்., 26ம் தேதி, தன் 87வது வயதில் இயற்கை எய்தினார்.பேராசிரியர் பி.எஸ்.மணிசுந்தரம் காலமான
தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X