உ.பி.,யில் 9 மருத்துவ கல்லுாரிகள் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Updated : அக் 27, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (37+ 22)
Share
Advertisement
சித்தார்த்நகர் :உத்தர பிரதேசத்தில் ஒன்பது புதிய மருத்துவ கல்லுாரிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ''கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள், மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தவில்லை,'' என, பிரதமர் குற்றஞ்சாட்டினார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சித்தார்த்நகர், இடா,
உ.பி., 9 மருத்துவ கல்லுாரிகள்,   மோடி

சித்தார்த்நகர் :உத்தர பிரதேசத்தில் ஒன்பது புதிய மருத்துவ கல்லுாரிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ''கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள், மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தவில்லை,'' என, பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சித்தார்த்நகர், இடா, ஹர்தோய், பிரதாப்கர், பதேபூர், தியோரியா, காஸிபூர், மிர்ஸாபூர் மற்றும் ஜாவ்ன்பூர் மாவட்டங்களில் 2,329 கோடி ரூபாய் செலவில் ஒன்பது அரசு மருத்துவ கல்லுாரிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் நரேந்தி மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

அப்போது பிரதமர் பேசியதாவது:உ.பி.,யில் கடந்த கால ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் சக்கரம் 24 மணி நேரமும் சுழன்று கொண்டே இருந்தது. அவர்கள் தங்கள் வீட்டு கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்தனர். மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை.மருந்து, ஆம்புலன்ஸ், பணியிட மாற்றம், பதவி வழங்குதல் என அனைத்திலும் ஊழல் மலிந்து கிடந்தது. இதில் பல அரசியல் குடும்பங்கள் பணம் கொழித்தன.
பூர்வாஞ்சல் பகுதி மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. அவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.

பா.ஜ., ஆட்சியில் மருத்துவ மையமாக பூர்வாஞ்சல் உருவெடுத்துள்ளது. ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே பா.ஜ., அரசின் நோக்கம்.இவ்வாறு அவர் பேசினார்.உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் துவக்கம்!நாட்டின் மிகப் பெரிய சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டமான, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை தன் சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். மேலும், 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் வாராணாசியில் பிரதமர் நேற்று துவக்கி வைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (37+ 22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-அக்-202121:31:17 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இந்தியா சுதந்திரம் அடைந்து 70 வருடம் பிறகு MEDICAL COLLEGE , நாங்கள் 50 வருடம் முன்னரே முடித்தவிசயம் மோடி , ஓகே late than by நெவெர்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-அக்-202118:06:54 IST Report Abuse
Bhaskaran வீரப்பன் விவகாரதில் கைமாரிய பணத்தில் இங்கே இருந்த அரசியல் வியாதிகழும் பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் கூட்டக u. பி. யில் மருத்துவகலோரி தொடங்கியதாக அப்போ செய்திகள் உண்டு
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
26-அக்-202117:08:23 IST Report Abuse
sankaseshan நிலம் கையகப்படுத்தாதது யார் தவறு ? விடியல் அரசும் மெத்தனமாக இருக்கு மத்தியஅரசு திட்டங்களில் கமிஸ்ஸின் பார்க்க முடியாது இதெல்லாம் தெரிந்தும் பாமரத்தனமான கமெண்டு வருகிறது ஜெயந்தனுக்கு சந்தேகம் இருந்தால் UP க்கு ஒரு ட்ரிப் அடித்து தெளிவு பெறலாம்
Rate this:
26-அக்-202121:59:16 IST Report Abuse
பாமரன்சங்கு... ரெண்டு வருஷம் முன்னாடியே நிலம் கொடுத்தாச்சுன்னு பார்லிமெண்டில் சொல்லப்பட்டு ஆர்டிஐ பதிலும் மத்திய அரசு குடுத்துருக்கு... நீர் புதுசா சொம்பை தூக்கிட்டு வந்ததால பழைய விஷயம் தெரியாமல் இருக்கும்...🤭 ரிடயர் ஆகிட்டு மும்பையில் குத்திக்கிட்டு கண்ணை இருக்க மூடிண்டுட்டா உமக்கு தான் இருட்டா தெரியும்... சித்த அக்கம்பக்கத்து விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க ஓய்..🙄🙄...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X