ஐ.பி.எல்., தொடர்: புதிதாக லக்னோ, ஆமதாபாத் அணி அறிமுகம்

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
துபாய்: ஐ.பி.எல்., தொடரில் புதிதாக லக்னோ, ஆமதாபாத் அணிகள் களமிறங்க உள்ளன. இந்த அணிகளுக்கு ஏலம் மூலம் பி.சி.சி.ஐ.,க்கு ரூ. 12,690 கோடி வருமானம் கிடைத்துள்ளது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008 முதல் ஐ.பி.எல்., 'டி-20' தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் என 8 அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த

துபாய்: ஐ.பி.எல்., தொடரில் புதிதாக லக்னோ, ஆமதாபாத் அணிகள் களமிறங்க உள்ளன. இந்த அணிகளுக்கு ஏலம் மூலம் பி.சி.சி.ஐ.,க்கு ரூ. 12,690 கோடி வருமானம் கிடைத்துள்ளது.latest tamil newsஇந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008 முதல் ஐ.பி.எல்., 'டி-20' தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் என 8 அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு முதல், அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட உள்ளது.
புதிய அணிக்கான அடிப்படை ஏலத் தொகை ரூ. 2000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 22 நிறுவனங்கள் ரூ. 10 லட்சம் கொடுத்து 'டென்டரை' பெற்றன. இதற்கான ஏலம் துபாயில் நடந்தது. இதில் பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா, ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு தலைவர் பிரிஜேஷ் படேல் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆமதாபாத், லக்னோ நகரங்களின் பெயரில் புதிய அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் கோல்கட்டாவை சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி., குழுமம் சார்பில் லக்னோ அணி, ரூ. 7090 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்டுள்ள சி.வி.சி., கேபிடல் குழுமம் சார்பில் ஆமதாபாத் அணி ரூ. 5600 கோடிக்கு ஒப்பந்தமானாது. இதனையடுத்து பி.சி.சி.ஐ.,க்கு ரூ. 12,690 கோடி கிடைத்துள்ளது.


latest tamil news
இந்த ஏலத்தில் பங்கேற்ற அதானி குழுமம் ரூ. 5000 கோடி என குறைவான தொகைக்கு தான் ஏலம் கேட்டிருந்தது. இதனால் வாய்ப்பு நழுவியது. மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் டோரன்ட் குழுமம் சார்பிலும் குறைந்த விலைக்கு ஏலம் கேட்கப்பட்டதால் கிடைக்கவில்லை.
ஒரு அணி குறைந்தது ரூ. 10,000 கோடி வரை ஏலம் போகும் என பி.சி.சி.ஐ., கணித்திருந்தது. ஆனால் அதிகபட்சமாக ரூ.7090 கோடிக்கு தான் கேட்கப்பட்டது. இதனால் பண மழையை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
25-அக்-202123:35:54 IST Report Abuse
Aarkay போட்ட முதலை எடுக்க நம்மை சூறையாடுவார்கள். T Shirt, Cap, Ticket, Cricket related casino games என விதவிதமாய் நம்மை குறிவைப்பார்கள். வஞ்சகர் வலையில் விழாமல், நம்மை நாம் காத்துக்கொள்வோம்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
25-அக்-202122:08:02 IST Report Abuse
பாமரன் என்னாது நம்ம ஃபைனான்சியருக்கு டீம் கிடைக்கலையா...😡 சரி சரி வரப்போற குளிர்கால கூட்டத்தொடரில் ஐபிஎல் சட்டத்திருத்த மசோதாவை அவசரமாக ராத்திரியில் சமர்ப்பித்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிடுவோம்...🤭🤭 பெரும்பான்மையான சபையில் நடந்ததை எதுத்து கேக்கறவனை ஆன்டிஇன்டியன்னு சர்டிபிகேட் கொடுக்கலாம்... இதேபோல் கிமு 420யில் காங்கிரஸ் செஞ்சாங்க... வேனும்னா ரங்கிடுவை கேட்டுப்பாருங்க...
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
25-அக்-202121:48:48 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவில் இந்த ஐபிஎல் வந்தபிறகு, கிரிக்கெட் விளையாட்டு மற்றும் வீரர்கள் ஒரு 'விட்பனை' பொருள் ஆகிவிட்டது/ஆகிவிட்டனர். 1960, 1970 -களில் நாம் பெரிதும் விரும்பி பார்த்து ரசித்த கிரிக்கெட் விளையாட்டு, இப்ப பார்க்கவே பிடிப்பதில்லை. பணம், பணம், பணம், பணத்தின் முன் கிரிக்கெட் விளையாட்டு ஒரு விட்பனை பொருள் போல் ஆகிவிட்டது, மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X