ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சி 2024ல் தெரியும் : அமித் ஷா உறுதி

Updated : அக் 27, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஸ்ரீநகர் :''ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின் ஏற்பட்டுள்ள பிரமிக்கத்தக்க வளர்ச்சி, 2024ல் தெரியும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துஉள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ளார். யூனியன் பிரதேசங்கள்இறுதி நாளான நேற்று, பல்வேறு வளர்ச்சித்
ஜம்மு - காஷ்மீர், வளர்ச்சி, 2024, அமித் ஷா

ஸ்ரீநகர் :''ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின் ஏற்பட்டுள்ள பிரமிக்கத்தக்க வளர்ச்சி, 2024ல் தெரியும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துஉள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ளார்.


யூனியன் பிரதேசங்கள்



இறுதி நாளான நேற்று, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் நிகழ்ச்சி ஒன்றில் அமித் ஷா பேசியதாவது:'காஷ்மீர் வளர்ச்சி குறித்து பாக்., அரசுடன் மத்திய அரசு பேச வேண்டும்' என, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. தன் கருத்தை கூற அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் நாம், பாக்., அரசுடன் பேசுவதை விட, காஷ்மீர் இளைஞர்களிடம் வளர்ச்சி குறித்து பேசுவோம்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு - காஷ்மீர், லடாக் என, புதிய யூனியன் பிரதேசங்கள் உருவான பின், அவற்றின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வளர்ச்சி திட்டங்களின் பிரமிக்கத்தக்க பயன், 2024ல் தெரியும்.


7 மருத்துவ கல்லுாரிகள்



பாக்., மற்றும் பிரிவினைவாதிகளை ஆதரிப்போர், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலையையும், இந்தியாவில் உள்ள காஷ்மீரையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின்சாரம், சாலை வசதி, ஆரோக்கிய பராமரிப்பு, கழிவறைகள் உள்ளனவா என கேட்டால் ஒன்றும் இல்லை என்ற பதில் தான் வரும். ஆனால் நம் காஷ்மீர் மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளனர்.

காஷ்மீரை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த மூன்று குடும்பங்கள், மூன்று மருத்துவ கல்லுாரிகளைத் தான் ஏற்படுத்திஉள்ளன. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏழு புதிய மருத்துவ கல்லுாரிகளை அமைத்து வருகிறது. முந்தைய ஆட்சியில் காஷ்மீரில் ஓராண்டுக்கு 500 பேர் மருத்துவராகும் நிலை இருந்தது; இது, புதிய மருத்துவ கல்லுாரிகள் அமைந்தபின், 2,000 பேராக உயரும். மருத்துவம் படிக்க யாரும் பாக்., செல்ல மாட்டார்கள். ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபட்டு வருகிறது; அதை அடைய காஷ்மீர் இளைஞர்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமித் ஷா ஸ்ரீநகரில் பேசும்போது, அவருக்கு முன் குண்டு துளைக்காத தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த தடுப்பு அகற்றப்பட்டது.


மருத்துவமனை திறப்பு



ஜம்மு - காஷ்மீரில் பெமினா நகரில் 115 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனையை அமித் ஷா திறந்து வைத்தார்.
அத்துடன், ஹன்த்வாரா மருத்துவக் கல்லுாரிக்கான அடிக்கல்லை நாட்டினார். பாரமுல்லா மாவட்டம், பெரோஸ்பூர் நல்லா நகரில் 46 கோடி ரூபாய் மதிப்பிலான, உருக்கு பாலம் மற்றும் 4,000 கோடி ரூபாய் செலவிலான சாலை திட்டங்கள் ஆகியவற்றையும் அமித் ஷா துவக்கி வைத்தார்.


கோவிலில் வழிபாடு



மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கீர் பவானி கோவிலுக்குச் சென்றார். அங்கு மாதா ரக்ன்யா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அவருடன், ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
26-அக்-202122:27:01 IST Report Abuse
Akash Yes after it goes to china via Pak
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
26-அக்-202107:35:52 IST Report Abuse
 N.Purushothaman சிறப்பு சட்டத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்திருந்தால் பண்டிட்டுகளுக்கு தங்களின் சொந்த இடத்தை விட்டு வெளியேறும் அவல நிலையோ அல்லது அவர்களின் மீதானோ தாக்குதலோ நடந்திருக்காது ....அதே போல் அந்த மாநிலம் மற்ற மாநிலங்கள் போல ஓரளவு நல்ல வளர்ச்சி அடைந்து சுற்றுலாத்துறை அதிக வருமானம் ஈட்டும் துறையாக அந்த மாநிலத்தில் மாறி இருந்திருக்கும் ...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-அக்-202106:10:48 IST Report Abuse
Kasimani Baskaran ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்டு அங்கு முழுவதும் இந்துக்களை குடியமர்த்த வேண்டும். இல்லை என்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கயவர்களுடன் சேர்ந்து தனி நாடு, தனி உரிமை என்று பிதற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X