மக்களுக்கு இலவச சிகிச்சை பிரியங்கா புது அறிவிப்பு

Updated : அக் 27, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
லக்னோ ;“உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், 10 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சைகள், மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படும்,” என, அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா அறிவித்துள்ளார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 403 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இங்கு ஆட்சியை எப்படியாவது
மக்கள், இலவச சிகிச்சை, பிரியங்கா ,

லக்னோ ;“உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், 10 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சைகள், மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படும்,” என, அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா அறிவித்துள்ளார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 403 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இங்கு ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் காங்., கட்சி தீவிரமாக உள்ளது.
இதற்காக கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா உ.பி.,யில் முகாமிட்டு தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார்.

வரும் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.மக்களை கவர தேர்தல் வாக்குறுதிகளை, பிரியங்கா தொடர்ந்து அளித்து வருகிறார். ஏற்கனவே, விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அவர் அளித்து
உள்ளார்.

இந்நிலையில், நேற்று ஒரு புதிய வாக்குறுதியை பிரியங்கா அளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:கொரோனா காலத்திலும் பா.ஜ., அரசின் அலட்சியத்தால், சுகாதார அமைப்பு மோசம்அடைந்துள்ளது. மக்களுக்கு நல்ல மற்றும் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும்.உ.பி.,யில் காங்., ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சைகளை மக்கள் இலவசமாக பெற்று பயனடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
26-அக்-202119:38:39 IST Report Abuse
Priyan Vadanad காங்கிரசை வழித்து துடைத்து வீச அம்மையார் முடிவு எடுத்துவிட்டார் போல தெரிகிறது.
Rate this:
Cancel
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
26-அக்-202118:48:17 IST Report Abuse
abdulrahim இத்தனை வருஷமா மருத்துவ கல்லூரிகளை கொண்டுவாரமல் இப்போ தேர்தலுக்காக 9 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார் ,இந்த லட்சணத்துல இந்த காவ்ஸ் மூர்க்கனுங்க பிரியங்காவை கேலி செய்ய வந்துருச்சுங்க.....
Rate this:
Cancel
saravan - bangaloru,சவுதி அரேபியா
26-அக்-202117:50:07 IST Report Abuse
saravan தம்பி செத்த சும்மா இருப்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X