பொது செய்தி

தமிழ்நாடு

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்தல்: அரசின் முடிவிற்காக ஆணையம் காத்திருப்பு

Updated : அக் 27, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை :மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்துவதா; மறைமுக தேர்தல் நடத்துவதா என, அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசின் முடிவுக்காக மாநில தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது.தமிழகத்தில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, சமீபத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. சென்னையை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும், ஊரக
மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்தல்,காத்திருப்பு

சென்னை :மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்துவதா; மறைமுக தேர்தல் நடத்துவதா என, அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசின் முடிவுக்காக மாநில தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது.

தமிழகத்தில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, சமீபத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. சென்னையை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும், ஊரக உள்ளாட்சி பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மறைமுக தேர்தல்



நகர்ப்புற உள்ளாட்சிகளை பொறுத்தவரை, மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள்; நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள்; பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உள்ளன. இதில், கவுன்சிலர் பதவிகளுக்கு பொதுமக்கள் ஓட்டளித்து, நேரடியாக பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்துவதா; தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள்வாயிலாக மறைமுக தேர்தல் நடத்துவதா என்பது, அரசின் முடிவை பொறுத்து அமையும்.தற்போது, தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளில், வார்டு வரையறை செய்யும் பணியும் வேகமாக நடந்து வருகின்றன.


அலுவலர்களுக்கு பயிற்சி



வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுச்சாவடி அதிகரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளும் நடக்கின்றன. இதற்காக, முதன்மை பயிற்றுனர்களை தொடர்ந்து, தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனிடையே மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்துவதா; மறைமுக தேர்தல் நடத்துவதா என்பதில், அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்த விஷயத்தில், அரசின் முறையான அறிவிப்புக்காக, மாநில தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது.இந்த அறிவிப்புக்குபின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எவ்வளவு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்கள் தேவை போன்ற விபரங்கள் கணக்கிடப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
26-அக்-202117:27:32 IST Report Abuse
raja இருங்க மேயர் யாரு?, சேர்மன் யாரு? ஊராட்சி தலைவர் யாரு?ன்னு இப்போதுதான் வீட்டுக்காரம்மா தேர்ந்தெடுத்துகிட்டு இருக்காங்க... முடிஞ்சதும் பேரோடல் லிஸ்ட்டை ஆணையத்திடம் கொடுப்போம்...முடிவை அறிவிச்சிடுங்க... விடியலா? கொக்கா?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-அக்-202109:53:27 IST Report Abuse
duruvasar நடந்து முடிந்த தேர்தலை சிறப்பாக கையாண்டீர்கள். அரசு கொடுக்கும் வழிகாட்டுதல்படி மேலும் வெகுசிறப்பாக செய்து முடீப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அரசுக்கு உறுதுணையாக அதிக இடங்களை அள்ளி தாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X