அரசியல் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கிடுக்கிப்பிடி!

Updated : அக் 26, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சொத்து குவிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜரான, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம், நேற்று எட்டு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அடுக்கடுக்கான கேள்விகளால், அவரை போலீசார் திணறடித்தனர். விரைவில் வேலுமணி, வீரமணி உள்ளிட்ட மேலும் சில, 'மாஜி'க்களுக்கும் சம்மன் அனுப்ப, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.கரூர்
முன்னாள் அமைச்சர் ,.விஜயபாஸ்கர்,

சொத்து குவிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜரான, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம், நேற்று எட்டு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அடுக்கடுக்கான கேள்விகளால், அவரை போலீசார் திணறடித்தனர்.

விரைவில் வேலுமணி, வீரமணி உள்ளிட்ட மேலும் சில, 'மாஜி'க்களுக்கும் சம்மன் அனுப்ப, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர்; இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு பள்ளியில் படிக்கும் இரு மகள்கள் உள்ளனர். விஜயபாஸ்கருக்கு சேகர் என்ற தம்பியும் உள்ளார்.


ஏழாம் பொருத்தம்சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரான விஜயபாஸ்கரின் தந்தை ராமசாமி, கரூரில் சிறிய அளவிலான சாயப்பட்டறையை நடத்தி வந்தார். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த விஜயபாஸ்கர், அம்மாவட்டத்தில் முக்கிய புள்ளியாக தலையெடுத்த பின், ராமசாமியின் குடும்பம் ஏறுமுகம் கண்டது.தற்போது, மின்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கும், விஜய பாஸ்கருக்கும் ஏழாம் பொருத்தம். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.,வில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தார்.இதனால், அ.தி.மு.க.,வில் கடலில் கரைத்த பெருங்காயம் போல விஜயபாஸ்கர் நிலைமை இருந்தது. அதன்பின், காட்சிகள் மாறின. செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அவர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டதும், கரூரில் மட்டுமல்ல, அ.தி.மு.க.,விலும் விஜய பாஸ்கரின் செல்வாக்கு உயர்ந்தது.


பல கோடி ரூபாய்மனைவி மற்றும் தம்பியுடன் சேர்ந்து விஜயபாஸ்கர், 'ரெயின்போ பேக்கிங் யூனிட், ரெயின்போ கலர்ஸ், ரெயின்போ ஹோம் பேப்ரிக்ஸ், ரெயின்போ புளு மெட்டல்ஸ்' என பல்வேறு நிறுவனங்களை நடத்த துவங்கினார். நிறுவனங்களை கவனிக்கும் பொறுப்பை, தம்பி சேகரிடம் ஒப்படைத்தார். கட்சியில் அசுர வளர்ச்சி காரணமாக, 2016ல் கரூர் தொகுதி எம்.எல்.ஏ.,வானார். இந்த ஆண்டு மார்ச் 15 வரை, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, சாலைகளில் பதிக்கும் ஒளிரும் விளக்கு, பஸ்களுக்கு உதிரிபாகங்கள் கொள்முதல் மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் வாங்குதல் உள்ளிட்டவைகளில், முறைகேடு செய்து பல கோடி ரூபாய் சுருட்டியதாக புகார் எழுந்தது.தனக்கு வேண்டிய நபர்கள் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு, 'டெண்டர்' கிடைக்கும்படிச் செய்து, ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.


குற்றச்சாட்டுகள்இதேபோல அமைச்சராக இருந்த உள்ளாட்சி துறை - வேலுமணி, வணிக வரித்துறை - வீரமணி, சுகாதாரத் துறை - விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஊழல் கறை படித்துள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முந்தைய ஆட்சியின் போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், செல்லும் இடமெல்லாம் சொல்லி வந்தார். அதற்கு ஏற்ப, ஆட்சிக்கு வந்ததும், லஞ்ச ஒழிப்பு துறை வாயிலாக, முதல் நபராக எம்.ஆர்.விஜபாஸ்கர் மீதான ஊழல் புகார் விசாரிக்கப்பட்டது.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலின் போது, விஜயபாஸ்கர் தனக்கு, 2.05 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் கூறியிருந்தார். இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுவில், 8.62 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணையில், விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அவரது சொத்து மதிப்பு, 55 சதவீதம் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. அத்துடன், விஜயலட்சுமி, சேகர் நடத்தி வரும் நிறுவனங்களிலும், பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.


வழக்குப்பதிவுஇதையடுத்து, விஜயபாஸ்கர், விஜயலட்சுமி, சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, ஜூலை 22ல், கரூர், சென்னை என 26 இடங்களில் வீடு, அலுவலகம் மற்றும் தொழில் பங்குதாரர்கள், விஜயபாஸ்கருக்கு வேண்டிய நபர்கள் நடத்தி வரும் நிறுவனங்களில், போலீசார் பல மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, 22.56 லட்சம் ரூபாய் ரொக்கம், சொத்து ஆவணங்கள், காப்பீடு நிறுவன முதலீடுகள், ஊழல் தொடர்பாக நடந்த பண பரிவர்த்தனை குறித்த ஆவணங்களை கைப்பற்றினர்.இது தொடர்பாக, செப்டம்பர், 30ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விஜபாஸ்கருக்கு 'சம்மன்' அனுப்பினர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் பணியில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று அவகாசம் கோரினோர். இதையடுத்து, அக்., 25ல் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.


திணறடித்த போலீஸ்அதை ஏற்று, சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை, 10:50க்கு, வழக்கறிஞருடன் விஜயபாஸ்கர் ஆஜாரானர். சரியாக, 11:00 மணிக்கு விசாரணை துவங்கியது. சில கேள்விகளுக்கு சிரித்தபடி பதில் அளித்த விஜயபாஸ்கர், அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார்.

ஊழல் நடந்திருப்பதற்கான ஒவ்வொரு ஆதாரங்களையும் காட்டி, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பல கேள்விகளுக்கு, 'மறந்து விட்டது; சரியாக ஞாபகம் இல்லை; சட்டப்படி தான் டெண்டர் விடப்பட்டது' என்று பதில் அளித்தார். '118 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், குறிப்பிட்ட எட்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் ஒதுக்கீடு செய்தது ஏன்' என்றும் கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், அவருக்கு வேண்டிய நபர்கள் நடத்தி வரும் நிறுவனங்களில் கிடைத்த ஆவணங்களை காட்டி, இரவு, 7:15 வரை அதாவது, எட்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை தொடர்ந்தது. விஜயபாஸ்கர் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டன. வீடியோ பதிவும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இன்றும் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது.இவரை தொடர்ந்து, வேலுமணி, வீரமணி, மற்றொரு விஜயபாஸ்கருக்கும், சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
26-அக்-202122:43:46 IST Report Abuse
rajan ஏண்டா டேய் பதவி இருக்கும் போது ரொம்பவும் அதிகமாக ஆட்டம் போட்டு இப்போது தேவையா இந்த அசிங்கம். எந்த நம்பிக்கையில் மீண்டும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று கணக்கிலடங்கா ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்தீர்கள். பாரத பிரதமர் மோடி மாதிரி நேர்மையாக இருங்கடா. உங்கள கைது செய்து கொசுக்கடி ஜெயிலில் தான் போடப் போகிறார்கள். நன்றாக அனுபவியுங்கள். அப்பவாவது புத்தி வருகிறதா என்று பார்க்கலாம்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-அக்-202118:39:17 IST Report Abuse
D.Ambujavalli இன்றோ, நாளையோ நெஞ்சுவலி வரும், மருத்துவமனை, வாய்தா நாடகம்....... பழகிப்போச்சுங்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-அக்-202108:46:47 IST Report Abuse
duruvasar திருப்பி கொடுத்தா உட்ருவாங்க. உங்களுக்கு 3 ஆப்ஷன் இருக்கு. 1. க்ளூ 2. ஃபோன் எ பிரண்டு 3. 50/௫௦ சமரசத்திற்க்கு போய்விட்டால் நீதிமன்றம் தலையிடாது. 10 நாளுக்கு முன்பு கூட இப்படித்தான் நடந்தது. ஊடகங்கள் கூட குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுவித்தது என செய்திகளை போட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X