தமிழ்நாடு

திருத்தணி மலைக்கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Added : அக் 25, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி முருகன் மலைக் கோவிலில், பக்தர்களுக்கு இடையூறாக வைத்திருந்த பழக்கடைகள், நேற்று, இணை ஆணையர் பரஞ்ஜோதி முன்னிலையில் அகற்றப்பட்டன.திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர்.இந்நிலையில், மலைக்கோவிலில் பஸ் நிறுத்தம் மற்றும் இருசக்கர வாகனங்கள்
 திருத்தணி மலைக்கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருத்தணி : திருத்தணி முருகன் மலைக் கோவிலில், பக்தர்களுக்கு இடையூறாக வைத்திருந்த பழக்கடைகள், நேற்று, இணை ஆணையர் பரஞ்ஜோதி முன்னிலையில் அகற்றப்பட்டன.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர்.இந்நிலையில், மலைக்கோவிலில் பஸ் நிறுத்தம் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில், 50க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து பழக்கடைகள், மோர் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

மேலும், பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்லும் போது பழ வியாபாரிகள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதால், பக்தர்கள் மனவேதனையுடன் செல்கின்றனர்.இது குறித்து தகவல் அறிந்ததும், கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி நேற்று, கோவில் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, ஆக்கிரமித்த பழம் மற்றும் மோர் கடைகளை அதிரடியாக அகற்றினர்.

மேலும், அப்பகுதியில் பிளிச்சிங் பவுடர் துாவி, இந்த இடத்தில் மீண்டும் கடைகள் வைத்தால், சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, இணை ஆணையர், கடைக்காரர்களை எச்சரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X