இந்தியா

ரூ.3 கோடி வருமான வரி ரிக்ஷா தொழிலாளி 'ஷாக்'

Added : அக் 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
லக்னோ ;ரிக்ஷா தொழிலாளியிடம், 3 கோடி ரூபாய் வருமான வரி கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பிய அதிகாரிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதுரா மாவட்டம் அமர் காலனியில் வசிப்பவர் பிரதாப் சிங். ரிக்ஷா இழுக்கும் கூலித் தொழிலாளி. வங்கிக் கணக்கு துவக்க தேவைப்பட்டதால் மார்ச்சில் 'பான்
ரூ.3 கோடி வருமான வரி ரிக்ஷா தொழிலாளி 'ஷாக்'

லக்னோ ;ரிக்ஷா தொழிலாளியிடம், 3 கோடி ரூபாய் வருமான வரி கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பிய அதிகாரிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதுரா மாவட்டம் அமர் காலனியில் வசிப்பவர் பிரதாப் சிங். ரிக்ஷா இழுக்கும் கூலித் தொழிலாளி. வங்கிக் கணக்கு துவக்க தேவைப்பட்டதால் மார்ச்சில் 'பான் கார்டு' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு அட்டைக்கு விண்ணப்பித்தார்.
அந்த மாத இறுதியிலேயே அவருக்கு பான் கார்டு வந்தது. ஆனால் அதில் சஞ்சய் சிங் என்ற பெயர் இருந்தது மட்டுமின்றி புகைப்படமும் தெளிவாக இல்லை.
எழுதப் படிக்க தெரியாத பிரதாப் சிங்குக்கு இந்த பெயர் மாற்றம் பற்றி தெரியவில்லை.
இந்நிலையில் அக்.,19ல் பிரதாப்பிற்கு போன் செய்த வருமான வரித் துறை அதிகாரி ஒருவர், வரி பாக்கி மூன்று கோடியே 47 லட்சம் ரூபாயை உடனே செலுத்தும்படி கூறினார். அதிர்ச்சி அடைந்த பிரதாப், தான் ரிக்ஷா ஓட்டும் கூலித் தொழிலாளி என கூறியுள்ளார். ஆனால் அந்த அதிகாரி அதை நம்ப மறுத்து விட்டார்.
இதையடுத்து சில நாட்களில் பிரதாப் வசிக்கும் குடிசையின் முகவரிக்கு வருமான வரி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்தது. அதைப் பார்த்து மிகவும் பயந்த அவர், வருமான வரித் துறை அதிகாரிகள் மிரட்டுவதாக, மதுரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
26-அக்-202119:03:11 IST Report Abuse
M Selvaraaj Prabu அரசு அதிகாரிகளின் லட்சணம் இதுதான். சும்மா டேபிளை தேய்த்து கொண்டு வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தால் இப்படித்தான். மல்லையாவை விட்டு விடுவார்கள்...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-அக்-202118:08:17 IST Report Abuse
Bhaskaran வரி துறையினரின் சாதனையில் மேலும் ஒரு மணிமகுடம்
Rate this:
Cancel
26-அக்-202109:09:21 IST Report Abuse
அப்புசாமி கோடி கோடியா பணத்தை பதுக்கி வெச்சுக்கிட்டு, ரிக்ஷா இழுப்பவர் மாதிரி வேஷம் போடுகிறான். உடாதீங்க. சுவரேறி குதிச்சு, கைது பண்ணி, நோண்டி நொங்கெடுங்க. அப்புறம் இவன் அவன் இல்லைன்னு வடிவேலுவை பாலா ரிலீஸ் பண்ண மாதிரி ரிலீஸ் பண்ணிருங்க. ரெண்டு, மூணு ப்ரமிஷன் , இல்லே எங்கேயாவது கெவுனரா போக வாய்ப்பு உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X