பொது செய்தி

தமிழ்நாடு

மகள் பேச்சால் ரஜினிக்கு பிரச்னை

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (107)
Share
Advertisement
சென்னை--'ரஜினிக்கு தமிழ் எழுத தெரியாது' என அவரது மகள் சவுந்தர்யா கூறியதால், ரஜினிக்கு எதிராக சிலர் பொங்கியுள்ளனர். அண்ணாத்தா படத்தை பார்க்க வேண்டாம்' என்ற கோஷத்தை, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.ரஜினியின் இளைய மகள் சவுந்தரா நேற்று, 'ஹூட் ஆப்' என்ற குரல் மூலம் கருத்துகளை பதிவு செய்யும் புதிய செயலியை துவக்கியுள்ளார். ரஜினி தன் குரலில் பதிவு செய்து

சென்னை--'ரஜினிக்கு தமிழ் எழுத தெரியாது' என அவரது மகள் சவுந்தர்யா கூறியதால், ரஜினிக்கு எதிராக சிலர் பொங்கியுள்ளனர். அண்ணாத்தா படத்தை பார்க்க வேண்டாம்' என்ற கோஷத்தை, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.



latest tamil news


ரஜினியின் இளைய மகள் சவுந்தரா நேற்று, 'ஹூட் ஆப்' என்ற குரல் மூலம் கருத்துகளை பதிவு செய்யும் புதிய செயலியை துவக்கியுள்ளார். ரஜினி தன் குரலில் பதிவு செய்து துவக்கி வைத்தார். துவக்க இந்நிகழ்ச்சியில் சவுந்தர்யா பேசியதாவது:என் அப்பா ஆசியுடன் இதை துவக்குகிறேன். அவர் எனக்கு தகவல் அனுப்பினால் பேசி அனுப்புவார். அந்த குரலை கேட்டபோது எனக்கு இந்த 'ஹூட் ஆப்' யோசனை தோன்றியது. எழுத படிக்க தெரியாதவர்கள் தங்கள் குரலில் கருத்துகளை பதிவு செய்யலாம். என் அப்பா பல மொழிகள் சரளமாக பேசுவார்; படிப்பார். ஆனால், தமிழ் சரளமாக எழுத வராது. இதை சொல்கிறேன் என்றால், அவருடன் பேசிய பின் தான் சொல்கிறேன். தமிழ் எழுத முடியாது என்பதால், அப்பா மீதான பாசம் போய் விடுமா?இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


ரஜினிக்கு தமிழ் சரளமாக எழுத தெரியாது என்ற விஷயத்தை, சவுந்தர்யா கூறியது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. 'அண்ணாத்த படத்தை பணம் கொடுத்து, தியேட்டரில் பார்க்க மாட்டோம்' என்றும் எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
31-அக்-202112:10:27 IST Report Abuse
Nesan மொட்டையை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதை தான்
Rate this:
Cancel
rauf thaseem - mawanella,இலங்கை
31-அக்-202106:56:49 IST Report Abuse
rauf  thaseem ரஜினி அருமையான மனிதர்... வாழ்க பல்லாண்டு.
Rate this:
Cancel
raju - Bangalore,இந்தியா
28-அக்-202120:08:12 IST Report Abuse
raju தமிழ் தெரியாவிட்டால் என்ன? அன்புடன் எங்கள் ரஜினிகாந்த் சார் ... எவ்வளவோ தமிழ் மக்களுக்கு செய்திருக்கிறார். அவரால் ஒரு இண்டஸ்ட்ரி வாழ்கிறது. அருமையான மனிதர்... வாழ்க பல்லாண்டு.
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
30-அக்-202115:39:59 IST Report Abuse
vinuஎந்த இண்டஸ்ட்ரி எப்ப வாழ்கிறது ? கொஞ்சம் புரியும் படி சொல்லு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X